16
November, 2026

A News 365Times Venture

16
Monday
November, 2026

A News 365Times Venture

காவல் நிலையத்தில் `மிரட்டல்' தொனியில் ரீல்ஸ்; கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் வீடியோ சர்ச்சை!

Date:

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளருமான வ.காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில் ஆய்வு என்ற பெயரில் நள்ளிரவில் உள்ளே சென்று, பெண் காவலரிடம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், அதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

அந்த ரீல்ஸ் வீடியோவை, த.வெ.க-வின் வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து கொலாபரேட்டராக அமைச்சர் காந்திராஜின் இன்ஸ்டா பக்கத்தை ஒன்றிணைத்திருக்கின்றனர். வீடியோவில், கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்துக்குள் நுழைகிறார். அதிலிருந்தே `கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெறும் `தானடி தானாரடி ராவடி ராங்காவெடி’ பாடல் வரிகள் பின்னணி இசையுடன் ஓடத் தொடங்குகிறது.

அமைச்சர் காந்திராஜின் ரீல்ஸ் பதிவு

பணியில் சீருடையுடன் இருக்கும் காவலர்களை அழைத்து பேசும் அமைச்சர் காந்திராஜ், பெண் காவலர் ஒருவரிடம் மிரட்டும் தொனியில் பேசுவதுபோன்ற காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. `இன்ஸ்பெக்டர் யாருமே இல்ல. இயர் எண்டு வருது’ என்று காந்திராஜ் பேசுவதும், தொடர்ந்து கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அங்கும் இங்குமாக நடப்பதும்போன்ற காட்சிகளுடன் ரீல்ஸ் முடிகிறது.

ஒருநாளுக்கு முன்னதாக பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த ரீல்ஸ் வீடியோவை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் பார்த்திருக்கின்றனர். அமைச்சரின் செயல்களை பார்த்த பார்வையாளர்கள் பலரும் கமெண்ட் செக்ஷனில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். இதையடுத்து, கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்துவிட்டார்கள் அமைச்சர் காந்திராஜின் ஆதரவாளர்களான த.வெ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?' – தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி பங்கேற்ற நிழ்ச்சியின் போது...

முதுமலையில் புலியை விரட்டிச் சென்ற சர்ச்சையும், அமைச்சர் வன்னிஅரசின் விளக்கமும்! என்ன நடந்தது?

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி,...

விளையாடும்போது மாயமான மூன்று சிறுவர்கள்; ஏரியில் சடலங்களாக மீட்பு – கள்ளக்குறிச்சி அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகன்களான...

'ஒரு கம்யூனிஸ்ட்காரர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார்.!'- சு.வெங்கடேசனை விமர்சித்த நீதிபதி சுவாமிநாதன்

சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட...