14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

நாகை மெத் கடத்தல் விவகாரம்: தவெக நிர்வாகி பூபாலனுக்குச் சொந்தமான குளத்தில் மெத் பதுக்கலா?

Date:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பூபலான். வழக்கறிஞரான இவர் த.வெ.க-வின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

இவரது மனைவி பிரேமியா. கடந்த 16ம் தேதி மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பூபலான் மற்றும் அவரது நண்பரான சுகன் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நூறு கோடி மதிப்புடைய போதைப்பொருளான 137 கிலோ மெத் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர வைத்தது.

தவெக நிர்வாகி பூபாலன் வீடு

இந்த விவகாரத்தில் பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ்குமார் ஆகிய நால்வரையும் கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் வேளாங்கண்ணி பெண் போலீஸ் சங்கீதா, வேளாங்கண்ணி டி.எஸ்.பி நிக்சனின் கார் டிரைவர் சிவா ஆகியோருக்கு இதில் தொடர்பிருப்பதாக வெளியான தகவல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து இருவரும் தஞ்சாவூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதில் சங்கீதா ரூ.100 கோடி மதிப்பிலான கடத்தலில் சாதாரண போலீஸான எங்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்வது வேடிக்கையானது. இதனைச் சிலர் திட்டமிட்டு பரப்பியுள்ளனர். இப்படி ஒரு தகவல் வெளியானதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக சங்கீதா புலம்பி வந்தார். இந்நிலையில், மெத் கடத்தல் விசாரணை குறித்த தகவல்கள் எதுவும் வெளியே கசியாமல் அடங்கி கிடந்தன.

தண்ணீர் வெளியேற்றப்பட்ட குளம்

மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பூபாலன் தொடர்புடையவர்களிடம் சத்தமில்லாமல் விசாரணையைத் தொடர்ந்து வந்தனர். பூபாலன் மனைவி பிரேமியா உட்பட 26 பேரிடம் திருச்சி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். 100 சிசிடிவி பதிவுகள்.. 200 செல்போன் உரையாடல்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதாகப் பேசப்பட்டு வந்தது. பூபாலனைப் போல் மற்றொரு த.வெ.க முக்கியப்புள்ளிக்கும் இதில் தொடர்பிருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. தீபாவளிக்குப் பிறகு இந்த விவகாரத்தில் பல அதிரடி திருப்பங்கள் உண்டாகும் எனப் பேசப்பட்டது.

இந்நிலையில் சிந்தாமணியில் உள்ள பூபாலன் வீட்டுக்குப் பின்புறம் மீன் வளர்ப்பதற்கான குளம் உள்ளது. அந்தக் குளத்துக்கு அடியில் மெத் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் பூபாலன் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்று மாலை பூபாலன் வீட்டுக்கு வந்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதற்காக பூபாலன் வீட்டு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர்.

இதுகுறித்து விபரம் அறிந்தவர்களிடம் பேசினோம், ”பூபாலன் கஞ்சா கடத்தல் வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர். சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் பலவற்றில் அவரது பெயர் அடிப்பட்டுக் கொண்டே இருக்கும். கடத்தலில் சிக்குபவர்களுக்காக ஆஜராகுதல், ஜாமீனில் எடுப்பது போன்றவற்றால் கடத்தல்காரர்களுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

இந்த அறிமுகத்தை வைத்து தானே கடத்தலில் தடம் பதிக்க ஆரம்பித்தார். இதையடுத்து நார்மலான குடும்பத்தைச் சேர்ந்த பூபாலன் கடந்த ஆறு வருடங்களில் செல்வந்தராக மாறினார்.

சிந்தாமணியில் உள்ள பூபாலனின் பங்களா வீடு பல கோடி மதிப்புடையது. வெளி நபர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் பல அடி உயரம் கொண்ட பெரிய மதில் சுவர் வீட்டைச் சுற்றி இருக்கும். உள்ளே என்ன நடக்குதுன்னே வெளியே தெரியாது. வீட்டுக்குப் பின் பகுதியில் மீன் குளம் ஒன்றை அமைத்து மீண் வளர்ப்பில் ஈடுப்பட்டு வந்தார். பெயருக்குதான் அது மீன் குளம் என்கிறார்கள். அதற்குள் கடத்தல் பொருள்களைப் போட்டு பதுக்கி வைப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது.

குளம்

மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரிடம் பூபாலன் குளத்திற்கு அடியில் குழித்தோண்டி பல கோடி மதிப்புடைய மெத்தை புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து இன்று மாலை நாகை வந்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சிலரிடம் விசாரணை நடத்தினர்.

அத்துடன் குளத்தில் இருந்த தண்ணீரைச் சிலரை வைத்து வெளியேற்றினர். குளத்துக்கு அடியில் மெத் புதைக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பும், தன்னைக் கைது செய்வதற்கு முன்பு பூபாலன்தான் முக்கிய நபர்களுக்கு மட்டும் பேசுவதற்குப் பயன்படுத்தி வந்த செல்போனை குளத்துக்குள் போட்டு விட்டார்.

அந்தச் செல்போன் கிடைத்தால் யாருக்கெல்லாம் இந்தக் கடத்தலில் தொடர்பிருக்கிறது என்பதை கண்டறியலாம் என்பதால் செல்போனை எடுப்பதற்காக இதனைச் செய்கிறார்கள் என மற்றொரு தரப்பிலும் பேசப்படுகிறது.

மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரின் சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்கிறார்கள். இந்தச் சம்பவம் நாகை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பெண்ணின் ரகசிய வாக்குமூலம்; 8 மணி நேர சோதனை; 3 குழிகள்'- ஜெம் வீரமணி வீடு சோதனை; பின்னணி என்ன?

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில்...

'குழி தோண்டி நீச்சல் குளத்தைச் சேதப்படுத்திட்டாங்க' – ஜெம் வீரமணி குடும்ப வக்கீல் குற்றச்சாட்டு

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் சிறுமிகளின் உடல்...

வந்தே பாரத் Sleeper ரயிலில் RAC இருக்கை ரத்து; விரைவில் அனைத்து ரயில்களிலும் RACக்கு முற்றுப்புள்ளி?

நீண்ட தூர ரயில்களில், உறுதிப்படுத்தப்பட்ட சீட்கள் முடிந்த பிறகு டிக்கெட் முன்பதிவு...

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: Instagram Influencer-ஆன இளம்பெண் கைது செய்யப்பட காரணம் என்ன?

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15...