13
November, 2026

A News 365Times Venture

13
Friday
November, 2026

A News 365Times Venture

'எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கினாரா முதல்வர் விஜய்?' – உண்மை என்ன?

Date:

தவெக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் நேற்று தனியார் விடுதியில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரிடமும் விஜய் ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்து கண்டித்து அனுப்பியதாக ஒரு தகவல் வெளியானது.

CM Vijay

சமூகவலைதளங்களிலும் இந்த விஷயம் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையிலேயே விஜய் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கினாரா? என்னதான் நடந்தது?

இதுதொடர்பாக முதல்வருக்கு நெருக்கமான சீனியர்கள் சிலரிடம் பேசினோம், ‘முதல்வர், ஆதவ், ஆனந்த் ஆகியோர் சில எம்.எல்.ஏக்களை கண்டித்து எச்சரிக்கை விடுத்தது உண்மைதான். ஆனால், வெளியில் பேசப்படுவதைப் போல எந்த எம்.எல்.ஏவிடமும் ராஜினாமா கடிதமெல்லாம் வாங்கி வைக்கவில்லை. அப்படி வாங்கி வைப்பதில் எந்த லாஜிக்குமே இல்லை.

CM Vijay
CM Vijay

ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய வேண்டுமெனில் அவரே கைப்பட எழுதிய கடிதத்தை சுயநினைவுடன்தான் ராஜினாமா செய்கிறேன் எனக் கூறி சபாநாயகரிடம் நேரில் கொடுக்க வேண்டும். சமீபத்தில் இசக்கி சுப்பையா ராஜினாமா செய்த போது டைப் செய்யப்பட்ட லெட்டரை கொண்டு வந்தார். உடனே சபாநாயகர் அவரது அறையிலேயே இசக்கி சுப்பையாவை உட்கார வைத்து கைப்பட ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிவிட்டுதான் அனுப்பினார்.

அப்படியிருக்க இப்போதே எம்.எல் ஏக்களை கூட்டி ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டார்கள் எனக் கூறுவது அபத்தமான செய்தி. நேற்று நடந்த சந்திப்பில் முதல்வர் எம்.எல்.ஏக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். எம்.எல்.ஏக்கள் சொன்ன குறைகளை அவரது டைரியிலேயே குறித்து வைத்துக் கொண்டு, ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என நம்பிக்கை வார்த்தை கூறியே அனுப்பினார். சில எம்.எல்.ஏக்களை கண்டித்து எச்சரித்தார். அவர்களிடமும் ராஜினாமா கடிதமெல்லாம் வாங்கவில்லை’ என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உ.பி தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்குள் வெடிக்கும் அதிகாரப் போட்டி – பாஜகவுக்கு சாதகமா? விரிவான அலசல்

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அம்மாநில...

சைபர் மோசடியில் பணம் போயிடுச்சா? முதல் 30 நிமிடங்களில் என்ன செய்ய வேண்டும்? சட்டம் சொல்வது என்ன? 14

“உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படப் போகிறது… உடனே இந்த லிங்க்கைத் திறந்து...

தஞ்சாவூர்: அடிதடியில் முடிந்த நிலத்தகராறு; பதற வைக்கும் வீடியோ; விவசாயியைத் தாக்கினாரா போலீஸ்?

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள துலுக்கவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ்...

"என்றைக்காவது ஒருநாள் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வரணும்" – திருநாவுக்கரசர் நம்பிக்கை

புதுக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்...