7
November, 2026

A News 365Times Venture

7
Saturday
November, 2026

A News 365Times Venture

எல்லாக் குற்றங்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா? – சட்டம் சொல்வது என்ன? – 12

Date:

“எல்லா மீனும் இருக்கு… ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம்!” வடிவேலுவின் இந்தக் காமெடியைப் பார்த்து நாம் சிரித்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் ஜாமீன் என்பது ஒருவரின் சுதந்திரத்துடன் தொடர்புடைய முக்கியமான சட்ட நடைமுறை!

ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலே கைது செய்யப்படுவாரா? கைது செய்யப்பட்டால் ஜாமீன் கிடைக்குமா? தெரிந்துகொள்வோம்!

ஜாமீன் கிடைத்தால் வழக்கிலிருந்து விடுதலையா?

இல்லை! வழக்கு விசாரணை நடைபெறும் காலத்திலோ அல்லது சட்டப்படி வேறு பொருத்தமான நிலையிலோ, விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு காவலிலிருந்து வெளியே இருக்க அனுமதிப்பதுதான் ஜாமீன். ஜாமீன் கிடைத்துவிட்டால் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை என்று அர்த்தமல்ல.

எல்லாக் குற்றங்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா?

குற்றங்கள் ஜாமீனில் வெளிவரக்கூடியவை (Bailable), ஜாமீனில் வெளிவர முடியாதவை (Non-bailable) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்களில், சட்டப்படி ஜாமீன் வழங்கப்படுவது உரிமையாகும். இதை BNSS பிரிவு 478 குறிப்பிடுகிறது.

சட்டம் சொல்வது என்ன?

ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களில் (Non-bailable offences), ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தின் விருப்ப அதிகாரத்திற்கு உட்பட்டது; ஆனால் அது தன்னிச்சையான அதிகாரம் அல்ல. குற்றத்தின் தீவிரம், கிடைக்கும் ஆதாரங்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர் தலைமறைவாகும் வாய்ப்பு, சாட்சிகளைப் பாதிக்கும் அபாயம் மற்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற நிபந்தனைகளைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்.

இதற்கான முக்கியமான சட்டப்பிரிவு BNSS பிரிவு 480.

கைது செய்வதற்கு முன்பே ஜாமீன் பெற முடியுமா?

அரசியல்வாதிகள், பிரபலங்கள் “முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்” என்ற செய்தியை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.

ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டில் கைது செய்யப்படலாம் என்ற நியாயமான அச்சம் இருந்தால், சட்டத்தில் உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்ஜாமீன் (Anticipatory Bail) கோரலாம். இதற்கான சட்டப் பிரிவு BNSS 482. இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல; தகுதியுள்ள யாரும் கோரலாம். எனினும், எல்லா குற்றங்களிலும் முன்ஜாமீன் கோர முடியாது. குறிப்பாக, BNS பிரிவுகள் 65 மற்றும் 70(2)-ன் கீழ் வரும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு BNSS பிரிவு 482-ல் விதிவிலக்கு உள்ளது

தினமும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போடணுமா?

ஜாமீனில் வெளியே வந்தவர் தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கையெழுத்துப் போடுவதைச் சினிமாவிலும் செய்திகளிலும் பார்த்திருப்போம். ஆனால், இந்த நிபந்தனை எல்லோருக்கும் விதிக்கப்படாது.

வழக்கைப் பொறுத்து, குறிப்பிட்ட நாட்களில் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், சாட்சிகளை மிரட்டக் கூடாது போன்ற நிபந்தனைகளை நீதிமன்றம் விதிக்கலாம்.

இந்த நிபந்தனைகளை மீறினால், சூழ்நிலையைப் பொறுத்து ஜாமீனை ரத்து செய்யக் கோரி உரிய நீதிமன்றத்தை அணுகலாம். BNSS பிரிவு 483-ன்படி, உயர் நீதிமன்றத்துக்கும் (High Court), செஷன்ஸ் நீதிமன்றத்துக்கும் (Court of Session) ஜாமீன் வழங்கவும், மாஜிஸ்திரேட் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை மாற்றவோ நீக்கவோ அதிகாரம் உண்டு. ஏற்கெனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நபரை மீண்டும் காவலில் வைக்கவும் உரிய சட்ட நடைமுறைக்கு உட்பட்டு உத்தரவிட முடியும் .

சட்டம் சொல்வது என்ன?

உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

State of Rajasthan v. Balchand (1977) வழக்கில், உச்ச நீதிமன்றம் “Bail, not jail” என்ற கோட்பாட்டை வலியுறுத்தியது. அதாவது, ஜாமீன் தொடர்பான முடிவுகளில், தேவையற்ற சிறைவாசத்தைத் தவிர்த்து, தனிநபர் சுதந்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனினும், எல்லா வழக்குகளிலும் ஜாமீன் கிடைக்கும் என்று இதற்குப் பொருளல்ல. தலைமறைவாகும் அபாயம், சாட்சிகளை மிரட்டும் வாய்ப்பு, மீண்டும் குற்றம் செய்வதற்கான சாத்தியம் போன்ற காரணிகளையும் நீதிமன்றம் பரிசீலிக்கும்.

நினைவில் வையுங்கள்! ஜாமீன் கிடைத்தால் குற்றமற்றவர் என்று அர்த்தமல்ல; ஜாமீன் மறுக்கப்பட்டால் குற்றவாளி என்றும் அர்த்தமல்ல. குற்றம் நிரூபிக்கப்படுகிறதா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும்.

ஜாமீன் என்பது விடுதலை அல்ல; விசாரணையைச் சிறைக்கு வெளியே இருந்து எதிர்கொள்ளக் கிடைக்கும் சட்ட வாய்ப்பு!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒன்றிய – மாநில உறவுக் குழு கலைப்பு: "அதிகாரச் சமத்துவத்திற்கு பேரிழப்பு" – சு.வெங்கடேசன் கண்டனம்

கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற...

உயர்மட்ட குழு கலைப்பு: "தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது"- திமுக அறிக்கை

கடந்த திமுக ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை...

'சண்டியர்': பிடிவாத கமல்… பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! – கமல் தரப்பு

22 வருடங்களுக்குப் பிறகு 'சண்டியர்' படத் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது!நடிகர் கமல்ஹாசன்...

"சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு நூலகத்தை திறந்து வைத்தால் போதுமா?"- எடப்பாடி விமர்சனம்

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது...