7
November, 2026

A News 365Times Venture

7
Saturday
November, 2026

A News 365Times Venture

பெரியார் நூலக விவகாரம்: 'சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை.!'- திமுக பரந்தாமன்

Date:

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பரந்தாமன், “கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, ஒரு தவறான கண்ணோட்டத்தை தவெக உருவாக்கி இருக்கிறது.

பெரியார் அறிவுலகம்

புத்தக கொள்முதலில் தவறான புத்தகங்கள் வந்துள்ளதாக தகவல் கிடைத்தும், ஏன் அதனை திரும்ப பெறுவதற்கு முதலமைச்சர் உத்தரவிடவில்லை? இந்த புத்தகங்கள் அனைத்தும் யார் கொள்முதல் செய்தார்கள், எவ்வளவு கொள்முதல் செய்தார்கள் என்ற விவரத்தை ஏன் இன்னும் அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் வெளியிடவில்லை?

இது தொடர்பான விவரங்களை தவெக தனது ஐடி விங் தளத்தில் வெளியிட்டு வருகிறது. ஒரு குற்றச்சாட்டு வருகிறது என்றால், முதலில் அரசு தரப்பில் இருந்துதான் விளக்கம் வரவேண்டும். திமுக ஆட்சியில் வெளிப்படைத் தன்மையோடு புத்தகங்களை கொள்முதல் செய்வதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள புத்தகங்கள் எந்த தேதியில் வாங்கப்பட்டன, அதனை வாங்குவதற்கு யார் அனுமதி அளித்தது மற்றும் எந்த தேதியில் அரசாங்க கணக்கில் இருந்து பணப்பறிமாற்றம் மேற்கொள்ளப்பட்டன?

தற்போது ஜூன் மாதம் வாங்கப்பட்ட புத்தகங்களில் தான் பிரச்னை வந்துள்ளது. திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில், இந்த விதமான பிரச்னைகள் இல்லை. அகல்விளக்கு புத்தக நிறுவனத்திற்கு எப்போது கொள்முதல் ஆர்டர் கொடுக்கப்பட்டது, எந்த தேதியில் இந்த புத்தகங்கள் எல்லாம் பெரியார் அறிவுலக நூலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவியுங்கள்.

அமைச்சர்  ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

திமுக ஆட்சியில் எந்தெந்த புத்தகங்களை எல்லாம் வாங்க வேண்டும் என்று போடப்பட்ட அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். Standup காமெடியன் அமைச்சர் ராஜ்மோகனை கேட்கிறேன். தைரியம் இருந்தால், அகல்விளக்கு பதிப்பகத்துக்கு எப்போது பணப் பரிவர்த்தனை நடந்தது என்பதை வெளியிடத் தயாரா? தமிழ்நாட்டில் யாரும் திரிஷா விஜய் என்ற எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க மாட்டார்கள். குறிப்பாக திமுகவினர் வாங்க மாட்டார்கள். இந்த புத்தகம் விஜய்யின் பிறந்தநாள் அன்று சீலிடப்பட்டுள்ளது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒன்றிய – மாநில உறவுக் குழு கலைப்பு: "அதிகாரச் சமத்துவத்திற்கு பேரிழப்பு" – சு.வெங்கடேசன் கண்டனம்

கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற...

உயர்மட்ட குழு கலைப்பு: "தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது"- திமுக அறிக்கை

கடந்த திமுக ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை...

'சண்டியர்': பிடிவாத கமல்… பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! – கமல் தரப்பு

22 வருடங்களுக்குப் பிறகு 'சண்டியர்' படத் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது!நடிகர் கமல்ஹாசன்...

"சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு நூலகத்தை திறந்து வைத்தால் போதுமா?"- எடப்பாடி விமர்சனம்

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது...