6
November, 2026

A News 365Times Venture

6
Friday
November, 2026

A News 365Times Venture

டெல்லி காற்று மாசு பிரச்னை: `பயிர்கள் மட்டுமல்ல, ஆடம்பர கார்களும் காரணம்..!'- உச்ச நீதிமன்றம்

Date:

தீபாவளி வந்துவிட்டாலே, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மாசு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது.

இது தீபாவளியையொட்டி வெடிக்கப்படும் பட்டாசுகளால் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற அண்டை மாநில விவசாயிகள் கோதுமையைப் பயிரிட நிலத்தைத் தயார் செய்யத் தொடங்குவார்கள்.

விரைவாக நிலத்தைத் தயார்படுத்த முந்தைய அறுவடைகளுக்குப் பின் மிஞ்சிய கழிவுகளை எரித்துவிடுவார்கள்.

அந்தப் பகுதியில் வீசும் வடமேற்குக் காற்று அந்த அடர்ந்த புகைகளை டெல்லிக்கு இழுத்து வரும். இது டெல்லிக்குப் பெரும் பிரச்னையாக மாறி வருகிறது.

சிகரெட்

30 சிகரெட்டுகள்…

இன்று (நவம்பர் 6) உச்ச நீதிமன்றம் டெல்லி காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மனுவை விசாரித்தது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோஹனா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

“நீங்களெல்லாம் டெல்லி காலநிலையை அனுபவித்து மகிழ்கிறீர்கள் என நம்புகிறேன்” என்று கூறி வழக்கின் விசாரணையைத் தொடங்கியுள்ளார் தலைமை நீதிபதி சூர்ய காந்த்.

வாதத்தின் போது மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங், ‘டெல்லி மாசுபாட்டால் என்னுடைய குரல் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் மூச்சை சுவாசிப்பது ஒரு நபர் தினமும் 30 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம்’ என்று குறிப்பிட்டார்.

நீதிபதிகள் பேசும்போது, “தற்போது மழை பொழிந்துள்ளது. இதனால் மாசுபாடு சற்று குறைந்துள்ளது. மேலும், விவசாயிகள் அடுத்த விதைப்புப் பருவத்திற்குத் தயாராகி வருவதால் பயிர்க் கழிவுகளை எரிப்பது இந்நேரம் நிறுத்தப்பட்டிருக்கும்” என்று தெரிவித்தனர்.

இதற்கு அபராஜிதா சிங், “டெல்லியின் காற்று மாசுபாட்டில் பயிர்க் கழிவுகள் எரிப்பு 14 சதவீதம் பங்கு வகிக்கிறது. இதனால், கழிவுகள் எரிப்பு உள்ளிட்ட உள்ளூர் மாசுபாட்டையும் பயிர்க் கழிவுகள் எரிப்பையும் உடனடியாகத் தடுத்து நிறுத்தத் தீவிர நடவடிக்கைகள் தேவை” என்று வாதாடினார்.

டெல்லி காற்று மாசு | Delhi Air pollution
டெல்லி காற்று மாசு | Delhi Air pollution

அபராஜிதா சிங்கிற்குப் பதிலளிக்கும் விதமாக, “நாம் எப்போதும் பயிர்க் கழிவுகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்… ஆனால் உயர்குடி வர்க்கத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சொகுசு கார்கள் உட்பட அனைத்து வாகனங்களும் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதானே இருக்கின்றன…” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

டெல்லி மாசுபாட்டிற்கு மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி விளக்கினார்…

> வாகனப் புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, பாரத் ஸ்டேஜ் 6 (BS-6) விதிகளுக்கு உட்பட்ட வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனமும் டெல்லிக்குள் நுழைய அனுமதி இல்லை.

> டீசலில் இயங்கும் ரிக்ஷாக்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.

> பிற நகரங்களில் இருந்து டெல்லிக்குள் வரும் பேருந்துகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாசுபாட்டுக் சான்றிதழ்கள் வழங்கப்படும் இடத்திலேயே புவிசார் குறியீடு (geotagging) செய்யப்படுகின்றன. சான்றிதழ் இல்லாமல் எரிபொருள் வழங்கப்படுவதில்லை.

> டெல்லியின் புவியியல் அமைப்பு காரணமாகக் குளிர்காலத்தில் காற்று எளிதில் வெளியேற முடிவதில்லை. நிலைமையைக் கட்டுப்படுத்த ‘தரப்படுத்தப்பட்ட நடவடிக்கைத் திட்டம்’ (GRAP) அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இறுதியில், பயிர்க் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க பயிர்க் கழிவுகளுக்கான (பராலி / வைக்கோல்) கொள்முதல் விலையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும், அதை மேலாண்மை செய்வதற்கான முறைகளைக் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related