6
November, 2026

A News 365Times Venture

6
Friday
November, 2026

A News 365Times Venture

பெரியார் அறிவுலகம் விவகாரம்: "நூலகத் துறையிலும் Party Fund! மாபெரும் அறிவுத் துரோகம்!" – அருண்ராஜ்

Date:

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட நூல்கள் இடம்பெற்றிருப்பதை எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியிருப்பது இப்போது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நூலகத்தில் புத்தகம் கொள்முதல் செய்வதில் முன்னாள் திமுக அரசு ஊழல் செய்துள்ளது என்று தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

“நூலகத் துறையிலும் Party Fund! பெரியார் அறிவுலகம் பெயரில் திமுக நடத்திய பெருங் கொள்ளை! மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் செய்த மாபெரும் அறிவுத் துரோகம்!

பெரியார் அறிவுலகம்

அறிவுப் புரட்சி மலர வேண்டிய கோவையின் மண்ணில், ‘பெரியார் அறிவுலகம்’ என்ற புனிதப் பெயரின் பின்னால் அரங்கேற்றப்பட்டிருப்பது தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு!

யார் தொடங்கிய திட்டமாக இருந்தாலும், அது மக்கள் நலன் சார்ந்தது என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மையின்றித் தொடர வேண்டும் என்கிற உன்னத நோக்கோடுதான், கடந்த அக்டோபரில் அந்த நூலகத்தின் வாயில்களை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

தனக்கு தானே பாராட்டு விழா நடத்திய ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கோவையில் சில நாட்களுக்கு முன் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தி, போலிப் பெருமைகளைச் சுயபுராணமாகப் பாடிச் சென்றார்.

ஆனால், அரண்மனை நாடகங்கள் எத்தனை காலம் நிலைக்கும்? இதோ, நம் கொங்கு மண்ணின் மைந்தரும், திருச்செங்கோட்டின் பெருமைமிகு எழுத்தாளருமான பெருமாள் முருகன் அவர்களின் கூர்மையான பேனா முனை, அந்த மாயத்திரையைக் கிழித்து அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது!

அகல் விளக்குப் பதிப்பகம், உதயசூரியன் பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் என்ற முகமூடிகளை மாட்டிக்கொண்டு, மனித மூளை சிந்திக்காத…

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் – திமுக

முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவால் அச்சுக்கூடத்தில் அவசரமாக உற்பத்தி செய்யப்பட்ட விஷக் குப்பைகளை நூல்களாக மாற்றி, இந்த நூலகத்தின் அலமாரிகளில் திமுக அரசு திணித்திருக்கிறது என்கிற உண்மை தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

பாரதியாரின் நெஞ்சுரமிக்க வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டும், காலத்தால் அழியாத அறநெறி நூலான நாலடியாருக்கே பொய்யான புனைவுகளைக் கட்டவிழ்த்து விட்டும்,

எதிர்காலத் தலைமுறையினரின் சிந்தனையில் அறியாமையின் நஞ்சை விதைக்கத் துணிந்திருக்கிறது இந்தத் திருட்டுக் கூட்டம்.

கல்வி, சிந்தனை, பகுத்தறிவு என்று மேடைதோறும் முழங்கிய தீய சக்தி திமுகவின் ஆட்சியில், இந்த ஒட்டுமொத்தப் பாவச் செயலுக்கும் விதை போட்டது யார்?

400 கோடி வசூல் புகழ் மகேஷ்

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ‘400 கோடி வசூல் புகழ் மகேஷ்’ தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நூலகக் குழுவின் மூலமாக நூலகத் துறையிலும் Party Fund ஆ எனத் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

ஒருபுறம் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று பசப்பு வார்த்தைகளால் போலி முழக்கமிட்டுவிட்டு, மறுபுறம் தந்தை பெரியாரின் பெயரையே களங்கப்படுத்தும் வகையில் போலி எழுத்தாளர்கள்,

போலிப் பதிப்பகங்கள் வழியே கொள்ளையடித்த திமுகவின் வஞ்சக முகம் இன்று நாறிப்போய்க் கிடக்கிறது.

அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் அறிவுக் கண்களைக் குருடாக்கத் துணிந்த இந்தத் துரோகத்தை மக்கள் அரசு ஒருபோதும் மன்னிக்காது.

தந்தை பெரியார் பெயரில் புரட்டு வியாபாரம் நடத்திய அத்தனை சூத்திரதாரிகளையும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு சட்டத்தின் கரங்களால் மிகக் கடுமையாகத் தண்டிக்கும்!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது; கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர்!' – செல்லூர் ராஜூ

மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேர முயற்சியில்...

பெரியார் நூலக விவகாரம்: 'அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்'- அண்ணாமலை

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட,...

ரூ.4,730 கோடி மணல் கொள்ளை: புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.4,730 கோடி மணல் கொள்ளை தொடர்பாக லஞ்ச...