30
October, 2026

A News 365Times Venture

30
Friday
October, 2026

A News 365Times Venture

ICU நோயாளிகளுக்கு மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை; கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்

Date:

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்கள் இந்த மருத்துவமனையை மட்டுமே சார்ந்துள்ளனர். மருத்துவர்கள் பற்றாக்குறையில் தொடங்கி நோயாளிகளின் படுக்கைகளில் நாய்கள் படுத்திருப்பது வரை பல்வேறு சேவைக் குறைபாடுகள் இந்த மருத்துவமனையில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மின் இணைப்பில் பழுது எனக் கூறி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் ஒளியைப் பயன்படுத்தி சிகிச்சை அளித்தும் உணவுகளை வழங்கியும் வரும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோத்தகிரி அரசு மருத்துவமனை

பின்னணி குறித்து தெரிவித்த கோத்தகிரி அரசு மருத்துவமனை பணியாளர்கள், “நேற்று காலையில் இருந்தே மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐ.சி.யூ பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நேற்று இரவு செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. வேறு வழியின்றி சில நோயாளிகளை எமர்ஜென்சி பிரிவுக்கு மாற்றி கண்காணித்து வருகிறோம்” என்றனர்.

கோத்தகிரி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் சப்ளை சரியாக இருக்கிறது. மருத்துவமனையின் ஒன்றிரண்டு பிளாக்குகளில்தான் கோளாறு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சென்னை: மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு – லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் அரசே மணல் குவாரிகளை நடத்தி வந்தது. மணல் குவாரிகளில்...

‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், “தமிழ்நாட்டு அரசியலில்...

'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன?

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில்...