28
October, 2026

A News 365Times Venture

28
Wednesday
October, 2026

A News 365Times Venture

"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை

Date:

தமிழ்நாட்டில் திருவள்ளுவர் என்றாலே வெள்ளை உடையில், அமைதியான தோற்றத்தில் காட்சியளிக்கும் உருவம்தான் பெரும்பாலும் நினைவுக்கு வரும். திருவள்ளுவரின் சிலைகள் மற்றும் உருவப்படங்களில் இந்தத் தோற்றம் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத எல்லைகளைக் கடந்த சிந்தனையாளராக கருதப்படும் திருவள்ளுவர் மத அரசியலுக்குள் இழுத்துவரப்பட்டார். குறிப்பாக, அவரை இந்து மத அடையாளத்துடன் முன்னிறுத்தும் முயற்சிகள் சமீபகாலமாக தீவிரமாக்கப்பட்டு வருவதும், அது குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் எழுவதும் வாடிக்கையாகிவிட்டது.

வானதி சீனிவாசன்

இதுவரை திருவள்ளுவரின் மத அடையாளம் குறித்து அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒருமித்த வரலாற்று முடிவு இல்லை. இதற்கிடையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி போரூர் மெட்ரோ ரயில் நிலையம் திறப்பதற்காக சென்னை வந்திருந்தார். அதையொட்டி போரூரில் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரது சிந்தனைகளை மத அடையாளங்களால் வரையறுக்கக் கூடாது என்று வலியுறுத்தும் தரப்பினர் இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் வரையப்பட்டிருக்கும் திருவள்ளுவர் ஓவியத்தில் திருநீறு, ருத்ராட்சையுடன் வரையப்பட்டிருக்கிறார். இதுவும் சமூக ஊடகங்களில் விவாதமாகியிருக்கும் நிலையில், பா.ஜ.க தலைவர் வானதி சீனிவாசன் தன் எக்ஸ் பக்கத்தில், “சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.

கடந்த கால திமுக அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்மக் கோட்பாடுகளை இழிவாகப் பேசியும் வந்த நிலையில் தற்போது இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி. மேலும் தொடர்ந்து இந்து மத வழிபாட்டுத் தலங்களான தாய் மூகாம்பிகை கோவில், கனகதுர்க்கை கோயில் என சென்று வழிபட்டு வரும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மரபினைப் பின்பற்றி தீபத் தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி

"அதிமுக - திமுக இணைவது அரசியல் பிழை இல்லை. திமுகவுடன் இணைவதில்...

“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன்

அமைச்சர் மரிய வில்சன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``அன்பில் மகேஸ்...

அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன?

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், கட்டிட அனுமதி உள்ளிட்டவைகளுக்கு...

செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய்

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி...