28
October, 2026

A News 365Times Venture

28
Wednesday
October, 2026

A News 365Times Venture

அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன?

Date:

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், கட்டிட அனுமதி உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் வாங்கப்பட்டதாக தனியார் பள்ளிகளின் சங்கங்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தன. அதன்பேரில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தி.மு.க செய்தி தொடர்பாளர் பி.டி அரசகுமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்தச் சூழலில் அன்பில் மகேஸ், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சண்முகபிரியா

இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக சென்னையில் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலதிபர் சண்முகபிரியாவின் பெருங்குடி வீடு, நீலாங்கரை வீடு ஆகியவற்றில் இன்று (28.10.2026) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

சண்முகபிரியாவின் வீட்டில் ரெய்டு நடத்தியது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரித்தோம். “ தனியார் பள்ளிகள் கொடுத்த லஞ்சம் பணம், பெண் தொழிலதிபர் சண்முகபிரியா நடத்தும் பிசினஸில் முதலீடு செய்யப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில்தான் இந்த அதிரடி ரெய்டை நடத்தியிருக்கிறோம். அதற்கு ஆதாரமாக தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது லட்சக்கணக்கான பணம் சண்முகபிரியாவின் பிசினஸ் வங்கி கணக்குகளுக்கு சென்றிருக்கின்றன. அதுதொடர்பாகத்தான் பெண் தொழிலதிபர் சண்முகபிரியாவின் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடத்தினோம். பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் சண்முகபிரியாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வழக்கை பொறுத்தவரை தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் சிக்கினால் எதிர்பாரத திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் முத்துக்குமாரின் வங்கி கணக்குகள், கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை ஆய்வுக்குட்படுத்தியதில்தான் பெண் தொழிலதிபர் சண்முகபிரியா குறித்த தகவல்கள் தெரியவந்தது. இவரின் பிசினஸ் குறித்த தகவல்களை சேகரித்திருக்கிறோம். அன்பில் மகேஸ் டீமுக்கும் சண்முகபிரியாவுக்கும் உள்ள பின்னணிகள் குறித்து விசாரித்து வருகிறோம். சண்முகபிரியாவின் தொடர்பு வட்டாரத்தில் இருக்கும் சிலர் மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. விரைவில் அங்கும் ரெய்டு நடத்தப்படும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை

தமிழ்நாட்டில் திருவள்ளுவர் என்றாலே வெள்ளை உடையில், அமைதியான தோற்றத்தில் காட்சியளிக்கும் உருவம்தான்...

செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய்

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி...

சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல

வடகிழக்கு பருவமழை காரணமாக‌ திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது....

“மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வரணுமா?" – டிடிவி தினகரன்

சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள மின்சார சுடுகாட்டில் மின்சாரம் இல்லாததால் இறந்தவர்...