27
October, 2026

A News 365Times Venture

27
Tuesday
October, 2026

A News 365Times Venture

"கைதிகள் தப்பிய நேரத்திற்கும், போலீஸுக்குத் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி" – அன்புமணி

Date:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ம் தேதி) இரவு தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பியதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

காவல்துறையின் விசாரணையில் கைதிகள் சிறை அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய்

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடியது அதிர்ச்சியளிக்கிறது: சிறைத்துறையின் தோல்வியே காரணம் – தவறு இழைத்தோர் மீது நடவடிக்கை தேவை! தேனி மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 17 பேர் நேற்றிரவு சிறைக்காவலர்களைத் தாக்கி விட்டு தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

போக்சோ வழக்குகள் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு மாவட்டச் சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்தது கண்டிக்கத்தக்கது. திரைப்படக் காட்சிகளில் மட்டுமே இடம்பெற்று வந்த கைதிகள் தப்பி ஓடுவது போன்ற காட்சிகள், நிஜத்திலும் நடக்கத் தொடங்கியிருப்பது நல்லதல்ல.

சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சிறைத்துறை போன்றவற்றின் நிர்வாகம் பலவீனமடைந்து வருவதையே இது காட்டுகிறது. மாவட்டச் சிறையில் இருந்த அனைத்துக் காவலர்களையும் தாக்கி விட்டு, ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடியிருப்பதை மிகவும் சாதாரணமான நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

சிறைத்துறையின் தோல்வியையே இது காட்டுகிறது. சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடியதாகக் கூறப்படும் நேரத்திற்கும், இந்த நிகழ்வு குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி இருப்பது இந்த நிகழ்வு குறித்து பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் தப்பி ஓடி 12 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை 4 பேர் மட்டும்தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். கைதிகள் தப்பி ஓடியதன் பின்னணியில் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“மக்களுக்கு 'வெற்றி தீபாவளி' பரிசாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது"- இபிஎஸ்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஆவின் பால் பொருள்களின் ...

இந்தியா – சீனா எல்லை பிரச்னை: "எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை..!" – சீனா நிலைப்பாடு

2019-ம் ஆண்டு தொடங்கிய இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தொடங்கிய விரிசல் கடந்த...

குடும்ப வன்முறை: அடிப்பது மட்டும்தான் வன்முறையா? சட்ட பாதுகாப்பும், உதவியும்! சட்டம் சொல்வது என்ன?-7

குடும்பம் என்றால் அன்பும் அரவணைப்பும் இருக்க வேண்டும். ஆனால், சில வீடுகளுக்குள்...

மகாராஷ்டிரா வறட்சி: 13000 பேர் தற்கொலை? தாலியை அடகு வைத்து கால்நடை தீவனம் வாங்கும் விவசாயிகள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் விதைத்த...