25
October, 2026

A News 365Times Venture

25
Sunday
October, 2026

A News 365Times Venture

சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை

Date:

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்தே இருமுடி கட்டிச் செல்வார்கள். அல்லது பம்பா கணபதி கோயில் வளாகத்தில் உள்ள கெட்டு நிறை மண்டபத்தில் இருமுடி கட்டிச் செல்வது வழக்கம்.

பம்பாவில் இருமுடி கட்டுவதற்காக 300 ரூபாய்க்கு ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். கெட்டுநிறை மண்டபத்தில் வெள்ளைநிற இருமுடிப் பையில் நெய் தேங்காய் மற்றும் பூஜைப் பொருட்களுடன் அர்ச்சகர்கள் இருமுடி கட்டித்தருவது வழக்கம்.

இந்த நிலையில் பம்பையில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் ‘கெட்டுநிறை’ மையத்தில், தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் இலவச வேட்டிகள், இருமுடிப் பைகளாகத் தைக்கப்பட்டு வழங்கப்படுவதாக புகார் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலைக்குச் சென்றிருந்தனர். அப்போது பம்பையில் உள்ள இருமுடி கட்டும் மையத்தில் ரூ.300 செலுத்தி இருமுடிப் பைகளைப் பெற்றதாகவும், ​சன்னிதானத்தை அடைந்து ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்வதற்காக இருமுடிக் கட்டை அவிழ்த்தபோதுதான், அந்த இருமுடிப் பையில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையுடன் கூடிய வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

பொங்கல் 2025 – வேட்டி, சேலை வழங்கும் திட்டம் எனவும், முகமை: தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் எனவும், திட்டத்தின் பதிவு எண், ரகம், தொகுப்பு எண் ஆகியவை இடம்பெற்றிருந்தன என அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

பம்பாவில் உள்ள கெட்டுநிறை மண்டபம்

தமிழகத்தில் ஏழை எளிய குடும்பங்களுக்காக ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக விநியோகிக்கப்படும் நலத்திட்ட வேட்டிகள், கேரளாவுக்குக் கடத்தப்பட்டு, இருமுடிப் பைகளாகத் தைக்கப்பட்டு வணிக ரீதியாக விற்கப்படுவது எப்படி என்று தமிழக பக்தர்கள் கேள்வி எழுப்பியது கேரளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ரேஷன் கடை நிர்வாகத்தினர், இடைத்தரகர்கள் மற்றும் இருமுடிப் பை தயாரிக்கும் ஒப்பந்ததாரர்கள் இடையே தொடர்பு இருக்கலாம் எனவும், இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் எனவும் பக்தர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வீடியோ வெளியிட்ட கடலூர் பக்தர்கள்
வீடியோ வெளியிட்ட கடலூர் பக்தர்கள்

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார், “ஒப்பந்ததாரர்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட பைகளில் இது நிகழ்ந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்துத் தேவஸ்வம் போர்டு நிர்வாகம் முழுமையாகப் பரிசீலித்து உரிய விசாரணை நடத்தும்” என்று உறுதி அளித்துள்ளார்.

சபரிமலையில் மண்டல – மகரவிளக்கு காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

கோவை மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை...

ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புற்றுநோயாளி பினோத் பஸ்வான் என்பவர் மும்பையில் உள்ள...

"குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?" – கனிமொழி கேள்வி

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டி...

"புதிதாக ஒரு நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது RSS-இன் திட்டம்" – என்ன சொல்கிறார் மாணிக்கம் தாகூர்?

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ்...