25
October, 2026

A News 365Times Venture

25
Sunday
October, 2026

A News 365Times Venture

ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள்

Date:

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புற்றுநோயாளி பினோத் பஸ்வான் என்பவர் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

பயணத்தின்போது அவர் நடு வழியில் இறந்து போனார். காலை 7.30 மணிக்கு இறந்துவிட்ட நிலையில் இது குறித்து காலை 8 மணிக்குச் சக பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் கொடுத்தனர். அதற்கு டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு உறுதி செய்ய வேண்டும் என்று டிக்கெட் பரிசோதகர் தெரிவித்தார். அதன் பிறகு டாக்டர் வரவில்லை.

உடலை ரயிலில் இருந்து அப்புறப்படுத்த பல மணி நேரமாக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மற்ற பயணிகள் இறந்த பயணியின் உடலோடு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ​​​​

உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பயணிகளில் ஒருவர் இரவு 7 மணியளவில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவைக் குறியிட்டு, சமூக ஊடகத்தில் ரயில்வே குறைதீர்க்கும் பக்கத்தில் இது குறித்து பகிர்ந்தார்.

ரயில் இரவு 8.30 மணிக்கு டாடா நகர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்குதான் டாக்டரும், ரயில்வே ஊழியர்களும் வந்தனர். டாக்டர், பினோத் பஸ்வான் உடலைச் சோதித்து பார்த்துவிட்டு இறந்ததை உறுதி செய்தார்.

அதன் பிறகுதான் உடல் ரயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இப்பிரச்னை குறித்து ரயில்வே நிர்வாகம் வேறு மாதிரி தெரிவித்துள்ளது.

சக்ரதர்பூர் ரயில்வே கோட்டத்தின் மூத்த வணிக மேலாளர் ஆதித்யா சவுத்ரி இது குறித்து கூறுகையில், ”இரயில் எண் 12859 இன் M-2 பெட்டியில் ஒரு பயணி மயக்கமடைந்து கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு இரவு 7.45 மணிக்கு தகவல் கிடைத்தது.

ரயில் டாடா நகரை அடைந்ததும், நிலையத்தில் இருந்த மருத்துவர் பயணியைப் பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று சவுத்ரி கூறினார்.

பயணிகள் இதில் வேறு மாதிரியாகத் தெரிவித்துள்ளனர். பயணிகள் இது குறித்து காலையே ரயில்வே ஊழியருக்கு தகவல் கொடுத்தும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இறந்த பயணியின் உடல் பயணம் செய்த ரயில் அன்றைய தினம் 12 மணி நேரம் தாமதமாகப் பயணம் செய்தது. அதோடு ரயில் பெட்டிகள் பராமரிப்பின்றி இருப்பதாகவும், கழிவறைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.

நீண்ட பயணத்தின்போது, ​​குறிப்பாக குழந்தைகள், வயதான பயணிகள் மற்றும் பெண்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்தே...

"குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?" – கனிமொழி கேள்வி

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டி...

"புதிதாக ஒரு நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது RSS-இன் திட்டம்" – என்ன சொல்கிறார் மாணிக்கம் தாகூர்?

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ்...

Dhanush: 'அவர் இறங்குனா CMதான்!' – கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்

சென்னை OMR இல் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தனுஷ் தனது...