24
October, 2026

A News 365Times Venture

24
Saturday
October, 2026

A News 365Times Venture

தனுஷ் ரசிகர்கள் சந்திப்புக் கூட்டம்: இடம் கொடுத்த CM விஜய்க்கு நெருக்கமான கல்லூரி? விவரம் என்ன?

Date:

நடிகர் தனுஷ் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறார். தவெக, அதிமுக, அமமுக எனப் பல கட்சியினரும் தனுஷின் அரசியல் வருகை குறித்து பேசியிருக்கின்றனர்.

இந்நிலையில், நாளை சென்னையில் தன்னுடைய பெண் ரசிகைகளுக்கெனத் தனி சந்திப்பு நிகழ்ச்சியை தனுஷ் ஏற்பாடு செய்திருக்கிறார்.

Dhanush

ரசிகர் மன்றக் கூட்டங்கள், நலத்திட்டப் பணிகள், நற்பணி இயக்கம் எனத் தன்னுடைய கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தனுஷ் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறார். இதனால் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா எனும் பேச்சும் எழுந்துள்ளது.

தவெகவின் முக்கிய அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் போன்றோரே தனுஷின் அரசியல் ஆசை குறித்து விமர்சித்து பேசியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு பெரிய ரசிகர் சந்திப்புக்கு தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் இருந்து பெண் ரசிகைகளை நிர்வாகிகள் மூலம் ஒருங்கிணைத்து இந்தச் சந்திப்பை நடத்தவிருக்கிறாராம்.

Dhanush
Dhanush

இதுதொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். ”குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழக்கமாக தலைவர் ரசிகர்களைச் சந்திப்பார். இந்த முறை கொஞ்சம் ஸ்பெசலாக முழுக்க முழுக்க பெண் ரசிகைகளைச் சந்திக்கிறார். தமிழகம் முழுவதுமிருந்து 2500-3000 பெண் ரசிகைகளை நிர்வாகிகள் மூலம் ஒருங்கிணைத்து அழைத்து வருகிறோம்.

நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்துக்காக முதலில் அடையாறு, வடபழனி பகுதிகளில் இடம் பார்த்தோம். சரியாக எந்த இடமும் கிடைக்கவில்லை. அதனால் OMR இல் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் பார்த்திருக்கிறோம். அங்கேதான் நாளை இந்த ரசிகைகள் சந்திப்பு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தவிருக்கிறோம். தலைவர் சொல்வதைச் செய்கிறோம். எல்லாம் அவர் விருப்பம்” என்கின்றனர்.

தனுஷின் ரசிகைகள் சந்திப்பு நடக்கவிருக்கும் தனியார் கல்லூரி தவெக அமைச்சர் ஒருவரின் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது ஹைலைட். உளவுத்துறையினரும் தனுஷின் மூவ்களைக் கவனமாக நோட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே கூட்டணியா(?)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" – என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்.24) செய்தியாளர்களைச் சந்திருக்கிறார். அப்போது,...

'நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?' – உண்மை என்ன?

முதல்வர் விஜய் அவர் வசிக்கும் நீலாங்கரை வீட்டை காலி செய்து பசுமைவழிச்...

'ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?'- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்கதையாக இருக்கிறது. கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி கிறிஸ்டோஃபர்...

“புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்…" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது....