29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

"தங்கத்தை விட தரமான பால் தான் தேவை.!"- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து தமிழிசை

Date:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் சுமார் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு இன்று (செப். 28) தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

ஜூன் 22 முதல் செப்.27வரை பிறந்த குழந்தைகளுக்கு 102 மையங்கள் மூலம் தங்க மோதிரம் வழங்கப்பட இருக்கிறது.

மோதிரம் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ அலுவலர்களால் குழந்தைகளின் பெற்றோருக்கு தரப்பட்டுள்ளது.

‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்

செப்.28 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த அரசு மருத்துவமனையிலேயே தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட இருப்பதாக தவெக அரசு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் தவெக அரசின் இந்தத் தங்க மோதிரத் திட்டத்தை தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள்..

தரமான பாலுக்கான தட்டுப்பாடை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள். தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை.

சென்னை மக்களின் தேவை 30 லட்சம் லிட்டர்கள் ஆனால், 14.5 லட்சம் லிட்டர்கள்தான் ஆவின் விநியோகிக்கிறது.

தங்க மோதிரத்தை விட தங்களது தேவை இன்று பால்தான் என்று குழந்தைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பதவிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வருசநாடு 98 கிராம மக்கள் போராட்டம்: “ஆட்சியாளர்களுக்கு உறுத்தவில்லையா?" – சீமான் கேள்வி

தேனி மாவட்டம், வருசநாடு அருகே சிங்கராஜபுரம், பசுமலைத்தேரி, கீழபூசனூத்து, மேலபூசனூத்து‌ உள்ளிட்ட...

"2 நாள்களில் 9 கொலைகள்; முதல்வர் 'மிக்சர்' சாப்பிடாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" – உதயநிதி

தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வருகின்றன. சட்டம் ஒழுங்கு குறித்து தொடர்ந்து...

“அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்தான் கட்டுப்படுத்துகிறார்" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக, தவெக, அதிமுக என மூன்று...

"நான் அவர்களை குறிப்பிடவில்லை, மோகன் குமாரமங்கலம் எனக்கு தோழர்.!"- சர்ச்சைக்கு ராஜ்மோகன் விளக்கம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக...