21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

முதல்வர் லண்டன் பயணம்: “அண்ணாமலை முதிர்ச்சியான தலைவர் என நினைக்கிறேன்; ஆனால்…" – மரிய வில்சன்

Date:

சென்னை ஆர்.கே. நகரில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

இந்தப் பேருந்து நிலையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வும், நிதித்துறை அமைச்சருமான மரிய வில்சன் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “0.37 ஏக்கரில், ரூ.2.50 கோடி திட்டச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத் திட்டம், முந்தைய தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலேயே கட்டப்பட்டிருக்கிறது. கட்சி வேறுபாடின்றி மேயர், எம்.பி, கவுன்சிலர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ உட்பட அனைவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டது.

அண்ணாமலை

முதலமைச்சரின் லண்டன் முதலீட்டுப் பயணத்தை வீ தி லீபர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். அவர் பா.ஜ.க தலைவராக இருந்திருக்கிறார். ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்திருக்கிறார். அதனால் அவர் முதிர்ச்சியான தலைவர் என்று நினைக்கிறேன். ஆனால், அவரிடமிருந்து இப்படியான விமர்சனம் நல்லதில்ல எனக் கருதுகிறேன்.

தற்போதைய சர்வதேச பொருளாதாரச் சூழலில், சிறிய அளவிலான முதலீடுகள் கூட மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை. AI உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஆட்குறைப்பு நிலவும் சூழலில், முதலமைச்சரின் முதலீட்டு ஈர்ப்பு முயற்சிகளைக் கேலி செய்வது பொருத்தமானது அல்ல.

ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தின் காரணமாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை கணிசமாக முன்னேறியுள்ளது. ஆகஸ்ட் 2025-ல் ரூ.96,567 கோடியாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், ஆகஸ்ட் 2026-ல் ரூ.1,09,104 கோடியாக உயர்ந்துள்ளது. இது சுமார் 12% வளர்ச்சியாகும்.

அதேபோல, மொத்த வருவாய் வரவு ரூ.1,08,460 கோடியிலிருந்து 8.60% உயர்ந்து ரூ.1,17,790 கோடியை எட்டியுள்ளது. பத்திரப் பதிவு மற்றும் ஜிஎஸ்டி துறைகளில் இருந்த கசிவுகள் அடைக்கப்பட்டதே இந்த வருவாய் உயர்வுக்கு முக்கியக் காரணம்.

மரிய வில்சன்
மரிய வில்சன்

அரசு நிதி மேலாண்மையைச் செம்மையாகக் கையாண்டு வருகிறது. காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் பால் கொள்முதல் விலை அதிகரிப்பு போன்ற செலவினங்கள் இருந்தாலும், திறமையான வருவாய் திரட்டல் மூலம் கடன் சுமை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் 2026-ல் மாநிலத்தின் நிகரக் கடன் 19% வரை குறைந்துள்ளது. இந்த 4 மாத ஆட்சியிலேயே இவ்வளவு கடன் குறைந்திருக்கிறது. இன்னும் வரும் மாதங்களில் கூடுதலாகக் குறையும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'உட்கார கூட இடமில்ல…' – முதல்வர் விஜய் ஆய்வு செய்த எழும்பூர் மருத்துவமனையின் அவலநிலை என்ன?

சென்னை எழும்பூரில் உள்ள பழமையான மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் சமீபத்தில்...

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி...

ஹார்முஸில் தொடங்கிய பிரச்னை: France-ல் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு; இந்தியாவுக்கும் சிக்கல்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.ஹார்முஸ் நீர்ச்சந்தி...

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர்...