11
September, 2026

A News 365Times Venture

11
Friday
September, 2026

A News 365Times Venture

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" – ஈரான் அதிபர்

Date:

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர்.

இன்று மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வு நடைபெற்றது. அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பேசினார்.

அவர், “கடந்த சில ஆண்டுகளாக ஈரான் கடுமையான தடைகளைச் சந்தித்து வருகிறது.

ஆனால், சமீபத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் தீவிர ராணுவ ஆக்கிரமிப்புகளின் காரணமாக, இந்த நெருக்கடிகள் கொஞ்ச மாதங்களில் மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளன.

பிரிக்ஸ்

மனித உயிரிழப்புகளையும் பொருள் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ள இது, ஒரு முக்கியமான உண்மையை மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது. அதாவது, ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பையும், அதன் தேசிய மற்றும் பிராந்தியப் பாதுகாப்பையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது.

ஒரு நாட்டின் வர்த்தகம், ஆற்றல் (எனர்ஜி), உள்கட்டமைப்பு அல்லது நிதி அமைப்பு ஆகியவை அரசியல் அல்லது ராணுவ அழுத்தத்திற்கு உள்ளாகும்போதெல்லாம், அதன் பாதிப்புகள் அந்த நாட்டின் எல்லைகளைத் தாண்டி, பிராந்தியச் சமநிலையையும், ஏன் உலகளாவிய நிலையற்றத்தன்மையைக் கூட ஏற்படுத்தக் கூடும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகம் கட்டுவேன் என்ற பிடிவாதம் ஆபத்தில் முடியும்’–வானதி சீனிவாசன்!

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” – BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர்...

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" – குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப்...

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? – மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ்...