11
September, 2026

A News 365Times Venture

11
Friday
September, 2026

A News 365Times Venture

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" – குடியரசு துணைத்தலைவர்

Date:

“தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை” என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இமானுவேல் சேகரன் நினைவிடம்

விடுதலைப் போராட்ட வீரரும் சமூக நீதிப் போராளியுமான தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி, குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்திப் பேசியவர், “தியாகி இமானுவேல் சேகரன் மகத்தான மாமனிதர். சாதிகளால் ஒருவரை ஒருவர் உயர்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும் கருதி வாழக்கூடாது என்கிற சமநீதியை நிலைநாட்டுவதற்காகத் தன் உயிரைத் தந்தவர்.

அவரைப் போன்ற மகத்தான தேசியவாதிகள் பிறந்ததால்தான், இன்றைக்கும் தமிழ் மண்ணிலே தேசியம் நிலைத்து நிற்கிறது. அவரைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

விடுதலைப் போராட்டத்தில் இளம் வயதிலேயே பங்கேற்ற அவர், விடுதலைக்குப் பின்னரும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபட்டார். சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் எழுப்பியவர், மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

சமத்துவம், சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது இலட்சியங்கள் என்றும் நினைவுகூரத்தக்கவை. தியாகி இமானுவேல் சேகரனின் வாழ்க்கையும் தியாகமும் நமது சமூகத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று அவர் புகழஞ்சலி செலுத்தினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” – BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர்...

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? – மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ்...

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக...

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" – BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில்...