3
September, 2026

A News 365Times Venture

3
Thursday
September, 2026

A News 365Times Venture

"10-க்கு 9 நாங்க; அதிமுகவும், நாமும் ஒன்றுதானே" – அதிமுக-வின் மறுப்பும் ஆதவ்வின் பதிலும்

Date:

சட்டமன்றத்தில் இன்று (செப்.1) கைத்தறி, தொழிலாளர் நலன் – குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய தவெக எம்எல்ஏ பிராகாசம், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி தொகுதியில் செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விரைவில் முடித்து தருமாறு மாண்புமிகு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஆதவ் அர்ஜுனா

அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திருவள்ளூர் எங்களுடைய மாவட்டம், 10-க்கு 10 தொகுதிகளை வென்றிருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்றார்.

அப்போது அதிமுகவினர் குறுக்கிட்டு, “10-க்கு 10 தொகுதி இல்லை. நாங்கள் ஒரு தொகுதியை வென்றிருக்கிறோம்” என்றனர். அதற்கு ஆதவ் அர்ஜுனா, “சரி 10-க்கு 9 தொகுதிகளை வென்றிருக்கிறோம். எல்லாம் நம்மளுடையதுதானே… அதிமுகவும், நாமும் ஒன்றுதானே” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

தொடர்ந்து சபாநாயகரும் சிரித்துக்கொண்டே, “அந்த உறவெல்லாம் அவைக்குத் தெரியாது” என்று தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை ஆந்திராவுக்கு மாற்ற முயற்சி; காய் நகர்த்துகிறாரா சந்திரபாபு?

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த பிரபல 'HD Hyundai' நிறுவனத்தின் பிரமாண்ட...

தைலாபுரம்: `ராமதாஸிடம் அரசியல் பேச வேண்டாம்!’- அறிவிப்பு பேனருடன் அனுமதிக்கப்படும் பாமக நிர்வாகிகள்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல்,...

`காங்கிரஸ் கட்சி ஒன்றும் தவெக-வுக்கு அடிமை கிடையாது!' – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``மேகதாதுவில்...

"19-ம் நூற்றாண்டின் பிற்போக்குத்தனமான கருத்து" – முஸ்லிம் மதகுரு பேச்சுக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு

தங்க நகைகள் பெட்டிக்குள் இருப்பதுபோன்று பெண்களும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், பெண்கள்...