28
August, 2026

A News 365Times Venture

28
Friday
August, 2026

A News 365Times Venture

'விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!' – பின்னணி என்ன?

Date:

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் திடீரென மாலை நேரத்தில் அவைக்குள் வந்து செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். அவைக்குள் முதல்வர் விஜய் திடீரென என்ட்ரி கொடுத்ததன் பின்னணி என்ன?

அமைச்சர்களுடன் முதல்வர் விஜய்

சமூகநீதித்துறை, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று அவையில் நடந்திருந்தது. முதல்வர் விஜய் இன்று காலையில் ஒரு தனியார் மருத்துவமனையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதன் பின் தலைமைச் செயலகத்தில் புதிதாக பணியில் சேருவோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை முடித்துவிட்டு நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க அமைச்சர்களுடன் அவசர ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதனால் மதியம் வரைக்கும் முதல்வர் விஜய் அவைக்கு வரவில்லை. இந்நிலையில், திடீரென இன்று மாலை அவைக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமராமல் இடம் மாறி, செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

முதல்வர் திடீரென மாலை நேரத்தில் அவைக்கு வந்ததன் பின்னணி என்னவென கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கையில், ‘முதல்வர் விஜய் தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அவைக்குள் இருந்து விவாதங்களை கவனிப்பார். பின்னர் அவரின் அலுவல் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்காகச் சென்றுவிடுவார். மாலை 5 மணிவாக்கில் வீட்டுக்கு கிளம்பிவிடுவார். இன்று பல்வேறு பணிகள் காரணமாக மதியம் வரைக்குமே அவரால் அவைக்கு வர முடியவில்லை. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காலையிலேயே முதல்வர் ஆப்சென்ட் ஆனதை குறிப்பிட்டு ‘கரூர் சம்பவத்தின் போது முதல்வர் அவையிலிருந்து பேசினார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இன்று நேபாள விவகாரத்துக்காக கவன ஈர்ப்பு தீர்மானம் கேட்டிருக்கிறோம். அவையில் முதல்வரும் இல்லை. தலைமைச் செயலாளரும் இல்லை’ எனப் பேசியிருந்தார். இதுவும் முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. அதனால்தான் அலுவல் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பாமல் நேராக அவைக்கே வந்துவிட்டார். செங்கோட்டையன் அருகே அமர்ந்து அவரிடமும் ஆதவ்விடமும் அவையில் நடந்த முக்கியமான விஷயங்களை கேட்டும் தெரிந்து கொண்டார்’ என்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மதியமே சட்டமன்றத்திலிருந்து கிளம்பிவிட்டார். தவெகவின் ஐ.டி.விங் இதை கையிலெடுத்து ‘முதல்வர் இங்கே இருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எங்கே?’ என விமர்சித்து வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கொளத்தூர் தொகுதியை சேகர் பாபுவிடமிருந்து பறிக்கும் திமுக?' – கட்சி மறுசீரமைப்பை தொடஙகிய ஸ்டாலின்!

கட்சி மாவட்ட எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலை அறிவித்திருக்கிறார்...

Nepal Flood: "மக்களை அழைத்து வருவதே எங்களின் முதல் இலக்கு!'' – மீட்பு பணிகள் குறித்து வெங்கட நாராயணா

நேபாளத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகளும் அங்குப் பரபரப்பாக...

அமெரிக்காவில் 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகிறதா? என்ன பிரச்னை? அவர்களுடைய அடுத்தக்கட்டம்?

விரைவில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகின்றன என்கிற...

"கார் ரேஸ் பற்றி இங்கு ஒரு விவாதம் வருகிறது, ஆனால்.!"- உதயநிதி vs செங்கோட்டையன்

சட்டமன்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை...