23
August, 2026

A News 365Times Venture

23
Sunday
August, 2026

A News 365Times Venture

கனடா குருத்வாராவில் தாக்குதல்: 2 பேர் காயம்; ஒருவர் கைது – Ideology கிரைமா இது?

Date:

கனடாவின் உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 5 மணிக்கு, எட்மன்டனின் உள்ள நானக்சர் குருத்வாராவில் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்குக் காரணமான ஒருவரைக் கைது செய்துள்ளது கனடா காவல்துறை. கைது செய்யப்பட்டவருக்கு 27 வயது. இவர் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது. இந்தச் சம்பவத்திற்கு ஒரு நாளுக்கு முன்புதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

மார்க் கார்னி

கருத்தியல் ரீதியாக இந்தத் தாக்குதலைக் கைது செய்யப்பட்டவர் நடத்தியிருக்கிறாரா என்கிற கோணத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

தற்போது சம்பவம் நடந்துள்ள குருத்வாராவிற்கு அருகே உள்ள இரண்டு சீக்கிய குருத்வாராக்களுக்குக் கடந்த வாரம் மிரட்டல் அழைப்புகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“இன்று காலை எட்மன்டனில் உள்ள நானக்சார் குருத்வாராவில் நடந்த தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்த இருவருக்காகவும், இந்தத் கொடூரமான சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள ஒட்டுமொத்த சமூகத்துக்காகவும் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாரும் தங்களின் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொள்ளக் கூடாது. உடனடியாகச் செயல்பட்ட எட்மன்டன் காவல் துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: “தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்" – அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சட்டமன்றத்தில்...

"கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?" – திமுக ஊழல் ஆதாரம் குறித்த கேள்விக்கு அருண்ராஜ் கிண்டல் பதில்

முழுமையாக 100 நாட்களைக் கடந்துவிட்ட த.வெ.க ஆட்சியில், தமிழக சட்டசபையில், ஆளுங்கட்சிக்கும்...

"எம்பி-க்களே இல்லாத தவெக-வை எப்படி இந்தியாக் கூட்டணில் சேர்ப்பது?" – மாணிக்கம் தாகூர் கேள்வி

கோவை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச்...

புதுக்கோட்டை: 'பேய் விரட்டும்' போராட்டம்; எலுமிச்சம்பழம், தாயத்து, சிலுவை கட்டிய த.வா.க-வினர்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி கிராமத்தில்...