18
August, 2026

A News 365Times Venture

18
Tuesday
August, 2026

A News 365Times Venture

TN Assembly: “இதற்காக தான் முதல்வரின் அறையை தற்காலிகமாக மாற்றுகிறோம்" – விவாதமாகும் முதல்வரின் அறை மாற்றம்.! | Live

Date:

பாஜக நீட் தேர்வை மட்டும் ஏன் ரத்து செய்யவில்லை?

தாரகை கத்பர்ட்

தாரகை கத்பர்ட், காங். எம்.எல்.ஏ“காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த எல்லா திட்டங்களையும் ரத்து செய்யும் பாஜக நீட் தேர்வை மட்டும் ஏன் ரத்து செய்யவில்லை. நீட்டை ரத்து செய்ய வேண்டுமென எங்களின் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்துகிறோம்.

காலை உணவுத்திட்டத்துக்கு காமராஜர் பெயரை வைத்த முதல்வருக்கு நன்றி.” என்றார்

விவாதமாகும் முதல்வரின் அறை மாற்றம்.!

எ.வ வேலு, “முதல்வர் தன்னுடைய அறையை மாற்றுகிறார். அது முதல்வருடைய விருப்பம். அறை மாற்றத்துக்கு 5.54 கோடி ரூபாய் டெண்டரை ஆன்லைனில் விடவில்லை. அதில் எதோ குழப்பம் இருக்கிறது என செய்தித்தாளில் செய்தி வெளியாகியிருக்கிறது. முதல்வர் அறையின் பணிகளெல்லாம் கிட்டத்தட்ட முடிந்த பிறகு டெண்டர் விடப்பட்டிருக்கிறது.

முதல்வர் தன்னுடய இப்போதைய அறையிலேயே இருந்தால் என்ன? நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடப்பற்றாக்குறையாக இருப்பதாக அதிகாரிகள் ஏற்கனவே குமுறுகிறார்கள்.” என்றார்.

அமைச்சர் ஆதவ், “முதல்வர் அறையின் டெண்டரே இன்னும் முடியவில்லை. ” என்றார். மேலும், “நாங்கள் கடந்த 5 ஆண்டுகளின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளை அறிக்கையை வெளியிடப்போகிறோம்.” என்றார்.

மேலும் தொடர்ந்த அமைச்சர் ஆதவ், “புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டுமென கலைஞரும் அம்மாவும் நினைத்தார்கள்.

முதல்வர் பல்வேறு தரப்பு அரசு அதிகாரிகளையும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் தினமும் சந்திக்கிறார். அதற்கேற்ற வகையில் இடவசதியான அலுவலகமாக இல்லை. அதிகாரிகள் இடநெருக்கடியான இடத்தில் பணியாற்றி வருகிறார்கள். அதற்காகத்தான் முதல்வரின் அறையை தற்காலிகமாக மாற்றுகிறோம்.” என்றார்,

பெயர் மாற்றம் ஒன்றும் புதிதல்ல.!

அமைச்சர் ராஜ்மோகன், “ஜெ.ஜெ பிலிம் சிட்டியை எம்.ஜி.ஆர் திரைப்பட நகரமாகவும், அம்மா மருந்தகத்தை முதல்வர் மருந்தகம் என்றும் அம்மா பசுமை வீட்டை கலைஞர் கனவு இல்லம் என்றும் நீங்கள் மாற்றினீர்கள். பெயர் மாற்றம் ஒன்றும் புதிதல்ல. காமராஜர் காலை உணவுத்திட்டம் எனப் பெயரை மாற்றி அதை மேலும் எங்களின் முதல்வர் விரிவாக்கம் செய்திருக்கிறார்.” என்றார்.

“இந்த அவையில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் என அத்தனை பேரும் உட்காந்திருக்கும் டேபிளையெல்லாம் திராவிட மாடலின் பொதுப்பணித்துறையில் நானே பார்த்து பார்த்து செய்தேன்.” – எ.வ.வேலு

“டேபிள், சேர் கொண்டு வரப்பட்டதற்கெல்லாம் தாங்கள்தான் காரணம் என்கிறார்கள். இதெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் வந்தவை.” – ராஜ்மோகன்

`முதல்வருக்கு யாரும் எழுதிக் கொடுக்க தேவையில்லை. அவருக்கு எல்லாம் தெரியும்.” – சபாநாயகர்

விஜய்
விஜய்

எ.வ.வேலு“முதல்வரின் பதிலுரையில், டெண்டர் வரைமுறையை பற்றி பேசுகையில் ஊழல் என முதல்வர் பேசினார். அதை நீக்க வேண்டும்.

முதல்வருக்கு யாரோ தவறான தகவலை சொல்லிவிட்டார்களோ அல்லது அதிகாரிகள் தவறாக எழுதிக் கொடுத்துவிட்டார்களோ எனத் தெரியவில்லை.” என்றார்.

“அதிகாரிகள் தவறாக எழுதிக் கொடுத்துவிட்டார்கள் என்பதை நீக்க வேண்டும்.” – செங்கோட்டையன்

“முதல்வருக்கு யாரும் எழுதிக் கொடுக்க தேவையில்லை. அவருக்கு எல்லாம் தெரியும்.” – சபாநாயகர்

“நேற்று வரை எங்களுக்கு சலாம் போட்டவர்கள்தான்….இன்று உங்களுக்கு சலாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள். அரசு அதிகாரிகளுக்கு எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தது எங்கள் அண்ணன் கலைஞர்தான்.” – எ.வ.வேலு

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

“வைக்கம் ஆறுக்குட்டியில் பெரியார் சிறையிலிருந்த நினைவாக அங்கே நினைவுச் சிறைச்சாலை கட்ட கேரள அரசுடன் பேசி வேலையை தொடங்கினோம்.

ஆனால், இப்போது அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அமைச்சரின் விளக்கத்தை வேண்டுகிறேன்.

பெரியாரை கொள்கைத் தலைவர் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தவெக, கோவையில் கட்டப்பட்ட பெரியார் நூலகத்தை இன்னும் திறக்கவில்லை.” என எ.வ வேலு பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், “தம்பட்டம்…தம்பட்டம் என பேசுவது தேவையில்லாதது.

எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியார் சிலையும் அம்பேத்கர் சிலையும் இருக்கிறது. அறிவாலயத்தில் பெரியார் சிலை எங்கே?” என்றார்.

தொடர்ந்து எ.வ வேலு, “புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் வரவேற்போம், பாராட்டுவோம்.

காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டிய அவசியம் ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

“அமைச்சர் போல திமுக ஆட்சியின் சாதனைகளை பேசாமல், இப்போதுள்ள மானியக் கோரிக்கை பற்றி பேசுங்கள்.” – எ.வ.வேலுவை நோக்கி சபாநாயகர்

சட்டமன்றத்தில் இன்றைய நிகழ்வின் போது பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ‘உலக தமிழர்களுக்கான முதல் குரல் முதல்வர் விஜய்யுடையதுதான். கர்நாடக காவல்துறையால் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா அரசு நேர்மையாக விசாரணை நடத்துவோம் என உறுதியளித்திருக்கிறது.” என்றார்,

மேலும் கடலூர் பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.!

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படுவது பற்றி அவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ்வின் பதில்.

“இத்திட்டத்தினால், சுற்றுச்சூழல், கடல்சார் உயிரினங்கள் மற்றும் மீன்வளம் ஆகியவற்றிற்கு ஏற்படக்கூடிய அனைத்து பாதிப்புகளையும் கூர்ந்தாய்வு செய்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.” எனத் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஜார்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 'பின்வாங்கிய அரசு' ; ஆனாலும் தொடரும் போராட்டம்!

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு வாரியம்...

உயிரோடிருப்பவருக்கு போலி இறப்புச் சான்றிதழ்; 'சொத்தை அபகரிக்கவா?' – கலெக்டர் காலில் விழுந்த மூதாட்டி

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்...

“தவெக-வின் 100 நாள் ஆட்சியில் 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்" – அப்பாவு காட்டம்

தவெக ஆட்சி அமைத்து 100 நாள்களை எட்டியிருக்கிறது. இது தொடர்பாக இந்த...

“5 வருடங்களில் வர வேண்டிய ஆட்சி மீதான வெறுப்பு 100 நாட்களிலே…" – மா.சுப்ரமணியன் காட்டம்

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில்...