31
July, 2026

A News 365Times Venture

31
Friday
July, 2026

A News 365Times Venture

குடியாத்தம்: `தவெக எம்எல்ஏ வெக்கமில்லாமல் பல்லிளிக்கிறார்’- வெளிநடப்பு செய்த திமுக நகர்மன்றத் தலைவர்

Date:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து கவுன்சிலர்களுடன் வெளிநடப்பு செய்தார், தி.மு.க-வைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் சௌந்தரராஜன்.

அப்போது பேசிய சௌந்தரராஜன், “ஸ்டாலின் ஆட்சியில் நகராட்சி பொதுநிதியில் நாங்கள் செய்துமுடித்த சாலை திட்டப்பணியை ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்கூட ஆகாத குடியாத்தம் த.வெ.க எம்.எல்.ஏ சிந்து, அவர் செய்ததுபோல வெக்கமில்லாமல் திறந்து வைத்து பல்லிளிக்கிறார். இந்த பணியை சிறப்பாகச் செய்தது யார்? என்று கூப்பிட்டு சால்வைப் போடவில்லை. எம்.எல்.ஏ-வின் இந்தச் செயலைக் கண்டிக்கிறோம்.

தி.மு.க நகர்மன்றத் தலைவர் சௌந்தரராஜன்

இந்த ஆட்சியில், இதுவரை 5 பைசாகூட சட்டமன்ற நிதி ஒதுக்கப்படவில்லை. நகராட்சியில் சொத்துவரி, குழாய் வரி கட்டுகிறார்கள். இதிலிருந்து பொது நிதி பெற்று முக்கியமான பணிகளை மேற்கொள்வோம். இப்போது, `பொது நிதி எடுத்து எந்த பணிகளையும் செய்யக் கூடாது’ என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக ஆணையர் சொல்கிறார். `ஏன் டெண்டர் வைக்கவில்லை?’ என்று கேட்டாலும், `மேலிருந்து உத்தரவு வரவில்லை’ என்கிறார். இதையெல்லாம் கண்டித்துதான் வெளிநடப்பு செய்திருக்கிறோம்’’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை: 'நீல நிறப் பால்பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் நெடி' – புகாருக்கு ஆவினின் விளக்கம் என்ன?

மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையிலிருந்து நாள்தோறும்...

கரூர்: `நிதி ஒதுக்கியாச்சு; சாலை எப்போது போடுவீங்க?'- சிதிலமடைந்த சாலைகள்; கேள்வி எழுப்பும் மக்கள்!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அங்கு நான்கு...

`கர்நாடக முதல்வரை அழைத்து வந்து டெல்டா வறட்சியை, முதல்வர் விஜய் காட்ட வேண்டும்' – பி.ஆர்.பாண்டியன்

தஞ்சாவூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்...

'வந்தே மாதரம்' மசோதா: `நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகி' – கனிமொழி கண்டனம்

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க...