28
July, 2026

A News 365Times Venture

28
Tuesday
July, 2026

A News 365Times Venture

சீர்காழி: த.வெ.க கொடி கலருக்கு மாறிய போலீஸ் நிழற்குடை – எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்!

Date:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே போலீஸ் நிழற்குடை இருந்தது. போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் டிராபிக் போலீஸார் பயன்படுத்துவதற்காக இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடையில் இருந்தபடி போலீஸார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஒழுங்கு செய்யும் பணியினை மேற்கொள்வார்கள். அந்த நிழற்குடையை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. நகைக்கடை உரிமையாளர் ஒருவர் இதை புதுப்பிப்பதற்கான ஸ்பான்சர் செய்ததுடன் நகை கடை பெயரையும் நிழற்குடையில் எழுதி விளம்பரம் செய்யப்பட்டது.

தவெக கலருக்கு மாறிய போலீஸ் நிழற்குடை

காவல் நிலையம், காவல் நிழற்குடை உள்ளிட்டவற்றுக்கு வழக்கமான கலர் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சீர்காழியில் நிழற்குடைக்கு தவெக கட்சியின் நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீஸ் நிழற்குடைக்கு ஆளுங்கட்சியான தவெக கட்சிக் கொடியின் நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது குறித்து விமர்சனம் செய்தனர். முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இது குறித்து விமர்சித்து பதிவிட சர்ச்சையானது.

இந்நிலையில், தவெக கட்சி கலர் கொடி பயன்படுத்தி பெயின்ட் அடித்து புதுப்பிக்கப்பட்ட அந்த நிழற்குடை உடனடியாக அகற்றப்பட்டது. தற்போது நிழற்குடை இருந்த இடம் காலியாக உள்ளது. பொதுவாக எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சி நிர்வாகிகள் தங்கள் தலைமையின் கவனத்தைப் பெறுவதற்காக வித்தியாசமாக எதாவது செய்வார்கள்… சமயத்தில் அது சிக்கலில்கூட முடியும்.

அந்த வகையில் போலீஸார் ஆளுங்கட்சியை திருப்திபடுத்துவதற்காக கட்சி கலரை போலீஸ் நிழற்குடைக்கு அடிக்க வைத்துள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்துடன் இது செயல்படுத்தப்பட்டதா கீழ் நிலையில் உள்ளவர்கள் தன்னிச்சையாகச் செய்தார்களா என்று தெரியவில்லை என்கிறார்கள். பெயின்டர் பல கலர்கள் கொண்டு வந்த நிலையிலும் தவெக கலரை அடியுங்கள் என சில போலீஸார் சொன்னதாகச் சொல்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி பகுதியில் தெரிவிக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழ்த்தாய் வாழ்த்து: “ஆளுநரின் செயல் கண்டனத்துக்குரியது" – அமைச்சர் நிர்மல் குமார்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது....

தமிழ்த்தாய் வாழ்த்து: “யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும்..!" – தவெக பதிவு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது....

“சாக்கடை தலைமுறை; வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டது"- மாணவர்கள் போராட்டம் குறித்து கங்கனா

டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தில் மாணவர்களின் முழக்கமும், செயல்பாடுகளும் வாந்தி...

அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.15 லட்சம் பேரம் பேசிய தவெக நிர்வாகி; வெளியான ஆடியோ – அறிக்கை விட்ட மா.செ

தமிழகம் முழு​வதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்​துக்கு ரூ.5 லட்​சம் முதல் ரூ.30...