10
July, 2026

A News 365Times Venture

10
Friday
July, 2026

A News 365Times Venture

`எமோஷனல் ஆன கரூர் குடும்பத்தினர்; கதறி அழுத முதல்வர் விஜய்!' – என்ன நடந்தது?

Date:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமனத்தை முதல்வர் விஜய் இன்று கொடுத்திருந்தார். இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எமோஷனல் ஆக, அதைப் பார்த்து முதல்வர் விஜய்யும் கதறி அழுதிருக்கிறார்.

Vijay

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு முதல்வர் விஜய் இன்று அரசு வேலைக்கான நியமன ஆணையை வழங்கினார். கரூரில் நடந்த இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைக் கண்டு முதல்வர் விஜய் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

நியமன ஆணையைப் பெற்ற குடும்பத்தினர் சிலரிடம் பேசினோம். “மாமல்லபுரத்துக்கு அழைத்து ஆறுதல் சொன்னபோதே விஜய் எங்களின் காலில் விழுந்து அழுது கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டிருந்தார். இன்றைக்கும் எங்களை பார்த்த உடனேயே அவர் உடைந்துவிட்டார்.

Vijay
Vijay

எங்களுக்கும் மனம் ஏதோ கனமாகிவிட்டது. நாங்களும் அழுதுவிட்டோம். நாங்கள் அழுததைக் கண்டு முதல்வர் இன்னமும் வருந்தி அழுதார். ‘மன்னிச்சுடுங்க… எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். நான் இருக்கேன்’ என்று தைரியமும் சொன்னார். எங்களின் இழப்பை எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. ஆனால், எங்களின் எஞ்சிய வாழ்க்கையை ஓட்ட இந்த அரசு வேலை உதவியாக இருக்கும்” என்றனர்.

31 பேருக்கும் பணி நியமன ஆணையை வழங்கிய விஜய், திருச்சி வந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? ஓடு… ஓடு… ஓடு' விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன்...

"தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்"- ஆளுநர் அர்லேகர் பேச்சு

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி...

`கோயில் நிலத்தை முதல்வர் விஜய் தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்திருக்கிறார்’- குற்றம்சாட்டும் நயினார்

கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச்...

கரூர் பள்ளியில் ஒளிபரப்பான தவெக நிகழ்ச்சி; தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு!

கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட தவெக நிகழ்ச்சி, பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட...