7
July, 2026

A News 365Times Venture

7
Tuesday
July, 2026

A News 365Times Venture

"ஹார்முஸ் நீர்ச்சந்தியில் கட்டணம் வசூலிக்கப்படும்; ஆனால், அது சுங்க வரி அல்ல" – ஈரான் புது பிளான்

Date:

ஹார்முஸ் நீர்ச்சந்தியில் சுங்க வரி வசூலிப்போம் என்று ஈரான் போர் தொடங்கியதில் இருந்து ஈரான் அவ்வப்போது சொல்லி வருகிறது. ஆனால், இதில் மற்ற நாடுகளுக்கு உடன்பாடு இல்லை.

காரணம், ஹார்முஸ் நீர்ச்சந்தி இயற்கையாகவே அமைந்த உலகத்திற்கான பொது சொத்து ஆகும்.

ஆனால், பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி மன்றத்தில் ஈரான் தூதர் அப்தோல்ரேசா ரஹ்மானி ஃபாஸ்லி ஹார்முஸ் நீர்ச்சந்தியில் ஈரான் சுங்க வரி வசூலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அப்தோல்ரேசா ரஹ்மானி ஃபாஸ்லி

இது குறித்து அவர் பேசியுள்ளதாவது…

“ஹார்முஸ் நீர்ச்சந்தி எங்கள் நாட்டின் எல்லையோரக் கடல் பகுதியின் ஒரு அங்கமாக இருப்பதால், அங்குப் பயணிக்கும் கப்பல்களுக்கு நாங்கள் நிச்சயமாகச் சேவை கட்டணம் வசூலிப்போம். இந்த நடவடிக்கையை ‘சுங்கக் கட்டணம்’ என்று குறிப்பிடக் கூடாது.

இந்த புதிய ஏற்பாடுகள் ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியிலான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும், கப்பல்களின் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கும் மட்டுமேயாகும்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழித்தடத்திற்கான புதிய ஏற்பாடுகள் குறித்தும், அங்கு அதிகளவிலான கப்பல்கள் செல்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கையாள்வது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஈரான் தற்போது ஓமனுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

கடினமான காலங்களில் எங்களுக்குத் துணையாக நின்று, எங்களுடன் நட்புப் பாராட்டிய நாடுகளுக்கு இந்தச் சேவை கட்டணத்தில் சில சிறப்புச் சலுகைகளை வழங்குவது குறித்து நாங்கள் நிச்சயமாகப் பரிசீலிப்போம்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

ஆகஸ்ட் 17 முதல் ‘எங்கிருந்தும் பத்திரப்பதிவு’ நடைமுறை : தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையாக, STAR 3.0...

`வெள்ளி, தங்க நிற ஜரிகை பார்டருடன் இலவச சேலை – வேட்டி: முதல்வருக்கு நன்றி" – நெசவாளர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அரசாணை வெளியிட்டதற்கு...

`வார்த்தை விளையாட்டு வேண்டாம்..!' – திருமாவளவன் பேச்சு குறித்து மாணிக்கம் தாகூர்

“அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது” எனக்...