30
June, 2026

A News 365Times Venture

30
Tuesday
June, 2026

A News 365Times Venture

"மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பேச்சை காங்., கேட்டிருந்தால் இந்நேரம்…" – விஸ்வநாதன்

Date:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (ஜூன். 29) பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசியது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

மாணிக்கம் தாகூர்

விழா மேடையில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், “தமிழகம் இதுவரை கண்டிராத முதலமைச்சராக ஜோசப் விஜய் இருக்கிறார். பல முதலமைச்சர்கள், தலைவர்களைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், அவர்களை எல்லாம் விட மென்மையான முதலமைச்சராக விஜய் இருக்கிறார். தமிழகத்தில் வந்திருக்கக்கூடிய புதிய ஆட்சி லஞ்சம் வாங்காது. தமிழகத்தில் வந்திருக்கக்கூடிய புதிய ஆட்சி வன்முறையைத் தூண்டாது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சைக் கேட்டிருந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலையெழுத்தே மாறி இருக்கும்.

70 சட்டமன்ற உறுப்பினர்கள் 10 அமைச்சர்கள் ஒரு துணை முதலமைச்சர் என மாறி இருக்கும். இனி காங்கிரஸ் கட்சிக்கு வசந்த காலம்தான்” பேசியிருக்கிறார்.

பிரவீன் சக்ரவர்த்தி
பிரவீன் சக்ரவர்த்தி

தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சில மாதங்கள் திமுக-காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவியது.

காங்கிரஸில் பெரும்பாலானோர் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினர். அதில் முக்கியமானவர்கள் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சிபிஎஸ்இ முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கிய மாணவர் – 1.66 கோடி கொள்முதல் தரவுகளை வெளியிட்டு அதிரடி

சிபிஎஸ்இ வாரியத்தின் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு டெண்டரில் உள்ள முரண்பாடுகளை...

செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அனுமதி! – ஆளுநருக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில்...

ஆந்திர மாணவி தவறவிட்ட சான்றிதழ்கள்; உதவிய ஏஐ; நூறு பஸ்களில் சோதனை நடத்தி கண்டுபிடித்த கேரள போலீஸ்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜாஷ்னவி என்ற 17 வயது மாணவி, எல்.எல்.பி...

"பண மதிப்பிழப்பு நாயகர், நிதி அமைச்சரானால் இந்தியப் பொருளாதாரம் என்ன ஆகுமோ?" – ரவிக்குமார் MP

மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியனின் ராஜினாமாவிற்குப் பிறகு, மத்திய அமைச்சரவை மாற்றம்...