1
July, 2026

A News 365Times Venture

1
Wednesday
July, 2026

A News 365Times Venture

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர் – உடனே ஏற்றுக்கொண்ட சபாநாயகர்!

Date:

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின.

இதனைத்தொடர்ந்து அதிமுக-விலிருந்து சில எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்தனர். தவிர அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.

எம்.ஆர் விஜயபாஸ்கர்

சமீபத்தில் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்போது எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் வரும் வியாழக்கிழமை தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்திருக்கிறார்.

சபாநாயகர் ஜேசிடி பிராபகரும் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். சபாநாயகரிடம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சட்டமன்றப் பேரவை விதி 21-இன் படி கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு திரு. M.R. விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்.

எம்.ஆர் விஜயபாஸ்கர்
எம்.ஆர் விஜயபாஸ்கர்

அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்றப் பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`காட்டுமன்னார் கோவிலில் நான் போட்டியிடாதது குறித்து திமுகவிடம் கேள்வி எழுப்பியதுண்டா?'- திருமாவளவன்

மேலவளவு முருகேசன் மற்றும் 6 பேரின் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம்,...

'கத்தாரில் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தை?' – ட்ரம்பின் ட்வீட்டும், ஈரானின் மறுப்பும்

ஈரான், அமெரிக்கா - இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலுக்குப் பிறகு, பேச்சுவார்த்தை...

DMK Files: அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், நாடாளுமன்ற...

'எங்கள் பங்கு தண்ணீரில் கை வைத்தால், கையை வெட்டுவோம்' – இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்

கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்ததையொட்டி, இந்திய...