25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

தமிழகத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்!

Date:

திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் (VVPAT) பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விராலிமலை தொகுதிக்கான இயந்திரங்கள் பரிசோதனை பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்தியத் தேர்தல் ஆணையம்

மேலும், இந்த 6 தொகுதிகள் அமைந்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் தொகுதி வாரியான தேர்தல் தொடர்பான முழுமையான விவரங்களை தலைமைத் தேர்தல் அதிகாரி கோரியிருந்தார். அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், வாக்காளர்கள் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

6 தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகங்களிடமிருந்து பெறப்படும் அறிக்கைகள் மற்றும் தேர்தல் தயார் நிலை விவரங்களின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை இறுதி செய்து அறிவிக்கும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஆள் பற்றாக்குறை முதல் Party Fund வரை!' – EB வெள்ளை அறிக்கையில் திமுக மீது வைக்கப்பட்ட 5 புகார்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்....

'டாஸ்மாக்-கிற்கு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?' – அமைச்சர் விக்னேஷின் பதில் என்ன?

​திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்கள்...

வெள்ளை அறிக்கை: "பணி நியமனம், பணி உயர்வு குறித்த விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்?"- செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த...

அமலுக்கு வரும் பாஸ்போர்ட் திருத்தச் சட்டம்; ஏறும் பாஸ்போர்ட் கட்டணம்; எவ்வளவு, எப்போது முதல்?

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 'பாஸ்போர்ட் திருத்தச் சட்டம், 2026'-ஐ கொண்டு...