20
June, 2026

A News 365Times Venture

20
Saturday
June, 2026

A News 365Times Venture

பி.டி.ஆர் vs மரிய வில்சன் : தவெக அரசின் வெள்ளை அறிக்கையின் போதாமைகள் என்னென்ன?

Date:

தமிழகத்தின் நிதி நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது த.வெ.க-வின் கூட்டணி அரசு. கடந்த 5 ஆண்டுகளில் கஜானா எந்தளவுக்கு காலியாக்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டவே இந்த வெள்ளையறிக்கை என்கின்றனர் தவெகவினர். ஆனால், நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கை உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை விட ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதோ என்றே தோன்ற வைக்கிறது.

மரிய வில்சன்

தமிழகத்தில் இதற்கு முன் இரண்டு முறை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. 2001 இல் அதிமுக ஆட்சியில் பொன்னையன் வெளியிட்டிருந்தார்.

அதன்பின் 2021 இல் திமுக ஆட்சியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருந்தார். இப்போது மரிய வில்சன் வெளியிட்டிருக்கிறார். இதில் வெகு சமீபத்தியது என்கிற அடிப்படையில் பி.டி.ஆர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையையும் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையையும் ஒப்பிடுவது சரியாக இருக்கும்.

பி.டி.ஆர்..!

பி.டி.ஆர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை அதை வெறுமென அரசியல் ஆயுதமாக பயன்படுத்த மட்டுமே உருவாக்கப்பட்டதாக தெரியாது. தமிழகத்தின் நிதி நிலை சார்ந்த நிஜ அக்கறை அதில் வெளிப்பட்டிருக்கும். சில இடங்களில் திமுக ஆட்சியில் நிதி நிலைமை மோசமாக இருந்ததையுமே தவிர்க்காமல் பி.டி.ஆர் குறிப்பிட்டிருப்பார். அதற்கு மிக முக்கிய காரணம், பி.டி.ஆர் 2016-21 ஆண்டுகளுக்கான நிதி நிலைமையை மட்டும் வெளியிடவில்லை. 2006 லிருந்து ஒவ்வொரு ஆண்டிலும் தமிழகத்தின் நிதி நிலை எப்படியிருந்தது என்பதை வெளியிட்டிருப்பார். அது மக்களுக்கு நிஜமாகவே ஒரு நிதி நிலை சார்ந்து விசாலமாக புரிந்துகொள்வதற்கான வெளியை ஏற்படுத்திக் கொடுத்தது.

உதாரணமாக சொன்னால், 2006 – 09 வரைக்கும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1452 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் உபரி கையிருப்பு எனும் நிலையில் இருந்திருக்கிறது. அதன்பிறகு உலகப் பொருளாதாரமே விழுகிறது. தமிழகத்தின் வருவாயும் சரிகிறது. 2009-11 வரை வருவாய் பற்றாக்குறை ஏற்படுகிறது. 2011 இல் திமுக ஆட்சியை இழக்கையில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 2,729 கோடி ரூபாய்.

2011-12 இல் அதிமுக ஆட்சியில் மீண்டும் வருவாய் உபரியை நோக்க்கி தமிழகம் செல்கிறது. 2011-12 இல் வருவாய் உபரி 1364 கோடி ரூபாயாகவும் 2012-13 இல் வருவாய் உபரி 1760 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.

இதுவும் பி.டி.ஆர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன்பிறகான ஆண்டுகளில்தான் வருவாய் உபரியே இல்லாமல் வருவாய் பற்றாக்குறையை நோக்கிய தொடர் பயணத்தை தமிழகம் தொடங்கியிருக்கிறது.

அதேமாதிரி, கொரோனாவுக்கு முன்பாகவே 2019 – 20 ஆண்டிலயே தமிழகம் கிட்டத்தட்ட 35,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை எட்டிவிட்டது. 2021 இல் திமுக ஆட்சியிம் அமர்ந்த போது தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 61,360 கோடி ரூபாய். இப்போது வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையின் படி தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கிட்டத்தட்ட 78,000 கோடி.

2006 லிருந்து வெவ்வேறு ஆட்சிகளின் கீழ் தமிழகத்தின் நிதி நிலை எப்படி இருந்திருக்கிறது என்பதை பார்க்கும் போது குறுகிய அரசியல் விமர்சனங்களிலிருந்து வெளிப்பட்டு மாநிலத்தின் வளர்ச்சியையும் அதைச் சுற்றிய சமூக சூழல்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மரிய வில்சன்
மரிய வில்சன்

மரிய வில்சனின் வெள்ளை அறிக்கை!

ஆனால், அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கை தமிழகத்தின் அத்தனை நிதி இன்னல்களுக்கும் கடந்த 5 ஆண்டு திமுக அரசுதான் காரணம் என்பதைப் போல சுட்டிக்காட்டுகிறது. 2006-21 காலக்கட்டத்துக்கான நிதிநிலையை பி.டி.ஆர் தான் வெளியிட்டு விட்டாரே? நாம் ஏன் மீண்டும் வெளியிட வேண்டும் என தவெக கூட்டணி அரசுக்கு ஆதரவானவர்கள் வாதிடலாம்.

ஆனால், வெள்ளை அறிக்கை என்பதை வெறும் எண்ணாக மட்டுமே பார்க்க முடியாது அல்லவா. அப்படி பார்க்க வேண்டுமெனில், கடந்த 5 ஆண்டு பட்ஜெட்களையும் முழுமையாக உட்காந்து பார்த்திருந்தாலே போதும் வெள்ளை அறிக்கையின் அத்தனை அம்சங்களையும் அதன் மூலமே நாம் பெற்றுவிட முடியும்.

வெள்ளை அறிக்கை என்பது ஒரு பதிவு, இங்கே குறிப்பிட்ட ஒரு 5 ஆண்டுகளை மட்டுமே மேற்கோடிட்டு இன்றைய நிலைக்கு காரணமே அந்த அரசு மட்டும்தான் என்பதை போல காட்டுவதில் நியாயமில்லை. 2020 கொரோனா காலக்கட்டத்தில்தான் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கிட்டத்தட்ட 75% அதிகரித்திருக்கிறது. அந்தப் புள்ளியை எங்கேயும் தொடாமல் கொரோனாவுக்கு பிறகு தட்டுத் தடுமாறி மீண்டெழுந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மாநிலத்தின் வீழ்ச்சிகரமான காலக்கட்டம் எனக் கூறுவதை எப்படி சரியாக இருக்கும்?

குறைந்தபட்சமாக கடந்து 10 ஆண்டுகளின் புள்ளி விவரங்களை காரண காரியங்களோடு அலசியிருந்தால் அமைச்சர் மரிய வில்சனின் வெள்ளை அறிக்கை இன்னுமே கூட சிறந்த புரிதலை கொடுத்திருக்கும்.

PTR Palanivel Thiagarajan

தேர்தல் பிரசாரங்களில் விஜய் கடைபிடித்த ‘ஒற்றை எதிரி திமுக’ எனும் அரசியல் வியூகத்தின் அடிப்படையில் இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்குமாயின், அந்த நோக்கத்தையும் இந்த வெள்ளை அறிக்கை முழுமையாக எட்டவில்லை என்றே கூற முடியும்.

ஏனெனில், பல இடங்களில் இந்த வெள்ளை அறிக்கை திமுக அரசு வாங்கிய கடன்களுக்கு நற்சான்று கொடுக்கிறது. மத்திய அரசின் விதி வரம்புகளுக்கு உட்பட்டுதான் கடன்கள் வாங்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. எந்தத் திட்டங்களுக்கும் அநாவசியமாக நிதி செலவிடப்படவில்லை என அமைச்சரே கூறுகிறார்.

செலவுகளுக்கு ஏற்ற வருவாயை ஈட்டவில்லை. பலதுறைகளின் முறையற்ற நிதிக்கசிவுகள் இருந்தது என்பதுதான் இந்த வெள்ளை அறிக்கை மூலம் நிதியமைச்சர் கூறும் மெசேஜ். தூய ஆட்சி கொடுக்கப் போகிறோம் எனக் கூறியிருக்கும் தவெகவுக்கு அந்த நிதிக்கசிவை சமாளிப்பதுதான் பெரும் சவாலாக இருக்கப் போகிறது.

மரிய வில்சன்
மரிய வில்சன்

குறைந்தபட்சம் 10 ஆண்டுகால புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு தேர்தல் வியூக அரசியலை மனதில் வைக்காமல், சில விடயங்களை வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருந்தால்திமுக, அதிமுக அரசுகளின் நிதி ஓட்டைகளை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டிருக்க முடியும்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நேரலை துண்டிப்பு; 'சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் மாற்றமா?' – உதயநிதி கடிதம்

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் நேற்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில்...

மாநிலங்களவை எண்ணிக்கை : `திட்டமிட்டு' முன்னேறும் பாஜக – கையறு நிலையில் காங்கிரஸ்! | முழு அலசல்

'தங்களிடம் பெரும்பான்மை பலம் உள்ளதால் எளிதாக வெற்றி பெறலாம்' என்ற நம்பிக்கையில்...

`சில நாய்கள் விசுவாசமாக இல்லை' – பிரிந்துசென்ற எம்.பி.க்கள் மீது எம்.பி. சஞ்சய் ராவத் சாடல்

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் தங்களை தனி அணியாக...

வேலுமணியிடன் உரசல்; எடப்பாடியின் கொங்கு கணக்கு… செந்தில் பாலாஜியின் மெளனம்! – பரபரக்கும் களம்!

செந்தில் பாலாஜி தி.மு.க-விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவதாக கரூர் மாவட்டத்தில்...