கடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
பல்வேறு பக்கங்களிலிருந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து தற்போது கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனாக ரூ.75,000 வரை பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாகத் தள்ளுபடி செய்யபடுவதாக முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். அதற்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 வரை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு.
இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் 25.05.2026 தேதியில் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாநிலம் முழுவதிலுமிருந்து இவ்விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கண்ட கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கிணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த மறு ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாகச் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 5 28.02.2026 2 பயிர் கடன் பெற்ற 14.43 இலட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.




