18
June, 2026

A News 365Times Venture

18
Thursday
June, 2026

A News 365Times Venture

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

Date:

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை திமுக எம்.எல்.ஏக்கள் முழுமையாக புறக்கணித்திருக்கின்றனர். அதேமாதிரி, அதிமுகவை சேர்ந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டும் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்

2026 தேர்தலில் முதல் முறை எம்.எல்.ஏக்களாக 146 பேர் தேர்வாகியிருக்கின்றனர். இவர்களுக்கு சட்டமன்ற நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பயிற்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் நிதி, சட்டம், சட்டப்பேரவை அலுவல் துறையை சார்ந்த செயலாளர்கள் எம்.எல்.ஏக்ளுக்கு சட்டப்பேரவையின் விதிமுறைகள் குறித்தும் மரபுகள் குறித்தும் தெளிவுப்படுத்துகின்றனர்.

புதிய எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாமல் அனைத்து எம்.எல்.ஏக்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தொடங்கிய பயிற்சி கூட்டத்தில் தவெக எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் முழுமையாக கலந்துகொண்டனர். அதேமாதிரி, விசிக சார்பில் அமைச்சர் வன்னி அரசு, ஐ.யூ.எம்.எல் யைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸை சேர்ந்த அமைச்சர் மேலூர் விஸ்வநாதன் போன்றோர் கலந்துகொண்டிருந்தனர்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்
எம்.எல்.ஏக்கள் கூட்டம்

அதேமாதிரி, அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக சார்பில் சௌமியா அன்புமணி, பாஜக சார்பில் போஜராஜன் போன்றோரும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

திமுக சார்பில் எந்த எம்.எல்.ஏக்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மதிமுக சார்பிலும் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பிலும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவின் பிரிவினர் கூட கூட்டத்துக்கு வரவில்லை. ஆனால், சங்கராபுரத்தில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ ராகேஷ் மட்டும் ஒரே ஒரு அதிமுக-காரராக கூட்டத்துக்கு வந்திருந்தார்.

கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களுக்கும் இந்த கூட்டத்தை தவிர்த்திருந்தனர்.

காலை 10:30 மணிக்கு தொடங்கிய பயிற்சி கூட்டம் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. நாளையும் பயிற்சி கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சி.வி.சண்முகம் அலுவலகத்தில் மீண்டும் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்! – அதிமுக-வில் ஓயாத சலசலப்பு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...

தவெக ஆட்சி: "38 நாள், 150 போக்சோ வழக்குகள், 126 பாலியல் குற்ற வழக்குகள்" – இபிஎஸ் கடும் விமர்சனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று...

அமெரிக்கா – இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? | மணிவண்ணன் திருமலை

மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைஅமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே...

தாக்கரே கட்சியில் `பிளவு 2.0' தனிஅணியாக அங்கீகரிக்க சபாநாயகரிடம் உத்தவ் கட்சி எம்.பி.க்கள் மனு!

மகாராஷ்டிரா சிவசேனாவில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பிளவுக்கு பிறகு உத்தவ் தாக்கரே...