18
August, 2026

A News 365Times Venture

18
Tuesday
August, 2026

A News 365Times Venture

“அன்று கரண்ட் பில் கட்ட முடியல; இன்று இலவச மின்சார உத்தரவில் கையெழுத்து…'' -கலங்கிய துரைமுருகன்

Date:

ராணிப்பேட்டை நிகழ்ச்சி ஒன்றில் தனது அம்மா குறித்தும் குடும்பநிலை குறித்தும் கண்கலங்கிய படி பேசியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், “நான் ஒன்றும் பெரிய பணக்கார வீட்டு பிள்ளை அல்ல. சாதாரண ஒரு நான்கு, ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருந்த குடிக்காரன் மகன் தான். நான் எனது வாழ்க்கையில், ஏர் ஓட்டியிருகிறேன், நாத்து நட்டு இருக்கிறேன். 

துரைமுருகன்

கத்திரிக்காய் எல்லாம் அறுத்து கொண்டு வந்து வீட்டில் கொட்டி, பெரிய காய்களை மேல் வைத்து, தலையில் சுமந்து கொண்டுபோய் சந்தையில் விற்பேன். மூன்று பம்ப் செட் இருந்தது எங்களிடம். அதற்கு கரண்டு பில் கட்டக் கூட அம்மாவும் நானும் கலங்கி நின்றிருக்கிறோம்.

அப்படிப்பட்ட துரைமுருகன் தான் நான். அதனால் தான் இன்றைக்கு உங்களுக்கு எல்லாம் இலவச மின்சாரம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டேன். அப்போது என் கண்கள் கலங்கியது.

கிணற்றில் தண்ணீர் இருந்தால் மட்டும் போதும். இப்போது விவசாயி 10 போர் போட்டாலும் சரி, 25-வது போர் போட்டாலும் சரி. இதற்காக, எத்தனை ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன் படுத்தினாலும் சரி ஒரு ரூபாய் கூட கட்டத் தேவையில்லை. எங்க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு செய்த நல்ல விஷயம் இது” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“100 நாள் ஆட்சி, ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" – முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு 100-வது...

“சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு.!" – வாழ்த்துச் சொன்ன முதல்வர் விஜய், ஸ்டாலின்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று தனது...

'உடைக்கப்பட்ட மாயை டு போராடும் விவசாயிகள்.!' – விஜய்யின் `வெற்றி மாடல்' அரசின் 100 நாள் செயல்பாடு?

தவெக ஆட்சியமைந்து 100 நாட்களை எட்டிவிட்டது. படங்களுக்கு 100 நாட்கள் வெற்றி...