17
May, 2026

A News 365Times Venture

17
Sunday
May, 2026

A News 365Times Venture

"அமமுக, அதிமுக MLAக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், CBI விசாரணை கேட்போம்" – TTV தினகரன் அதிரடி

Date:

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

தவெக குறித்தும் அக்கட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கொடுக்கும் ஆதரவு குறித்தும் பேசிய அவர், “அதிமுகவை அழிக்க நினைக்கும் விஜய்க்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவது எந்த வகையில் நியாயம்?

அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த விஜய், அதிமுகவின் பேரைக் கூட சொல்லாமல் சில இடங்களில் மறுத்த விஜய் இன்றைக்கு அதிமுகவின் ஆதரவைப் பெறுகிறார்.

விஜய்- அதிமுக எம்எல்ஏக்கள்

தவெக ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. விசிக, இடதுசாரிகள் 6 மாத காலம் தாங்குவார்களா எனத் தெரியவில்லை.

அமைச்சர்களாகப் பதவியேற்றால் கம்யூனிஸ்ட், விசிகவின் மானம் போயிருக்கும். தவெக ஆட்சிக்கு இனி கஷ்டகாலம்தான். தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணியில் இருந்து, தேர்தலுக்குப் பின் பதவிக்காக இன்னொரு கூட்டணிக்குச் செல்கின்றனர்.

முதலமைச்சர் விஜய் இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சியில் இருந்து ரியல் ஆட்சிக்கு வர வேண்டும். செங்கோட்டையன் சட்டைப் பையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார்.

அதிமுகவை அழிக்க துணைபோகும் செங்கோட்டையனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி நியமிக்கும் கொறடாவின் உத்தரவுதான் செல்லும். தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும். அமமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்துவோம்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

”விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அதிமுக-வின் வாக்குகளே” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் அதி.மு.க மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி....

"எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வலுவிழந்து விட்டது" – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது...

POCSO வழக்கில் மத்திய இணை அமைச்சர் பண்டியின் மகன் கைது; பதவி நீக்கம் செய்ய மோடிக்கு TRS கோரிக்கை

மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத்,...