17
May, 2026

A News 365Times Venture

17
Sunday
May, 2026

A News 365Times Venture

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் ஆனைமங்கலம் செப்பேடு; நெதர்லாந்து அரசுக்கு பிரதமர் நன்றி!

Date:

பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது, தமிழர்களின் வரலாற்று சிறப்பைப் பறைசாற்றும் வகையில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

ராஜராஜ சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடான இதில், சோழர்களின் பரம்பரை மற்றும் வரலாற்று வெற்றிகள் குறித்த முக்கிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

செப்பேடுகள்

இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.

சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன.

இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதைக் குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன.

பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணங்கள்...
பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணங்கள்…

இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாசாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆந்திரா: "3வது, 4வது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.30 ஆயிரம் சன்மானம்" – முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில...

"எல்லா விஷயங்களிலும் ஒன்றாக நிற்க முடியாது" – பினராயி விஜயனைச் சந்தித்த வி.டி.சதீசன் கூறியது என்ன?

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி...

கைநழுவிய மெகா திட்டம்: “தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி"- முதல்வர் விஜய்-யிடம் TRB ராஜா கோரிக்கை

இந்தியாவின் 5-ம் தலைமுறை அதிநவீன ஸ்டெல்த் போர் விமானத் திட்டமான 'AMCA'...

காங்கிரஸ்: “அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா?" – `NO' சொல்லும் கார்த்தி சிதம்பரம்; காரணம் என்ன?

தவெக ஆட்சி அமைத்ததும், அ.தி.மு.க-வில் இப்போது நடந்துவரும் உட்கட்சிப் பூசலெல்லாம் தமிழ்நாடு...