9
June, 2026

A News 365Times Venture

9
Tuesday
June, 2026

A News 365Times Venture

கைநழுவிய மெகா திட்டம்: “தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி"- முதல்வர் விஜய்-யிடம் TRB ராஜா கோரிக்கை

Date:

இந்தியாவின் 5-ம் தலைமுறை அதிநவீன ஸ்டெல்த் போர் விமானத் திட்டமான ‘AMCA’ (Advanced Medium Combat Aircraft) விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை, ஆந்திர பிரதேச மாநிலத்திடம் தமிழ்நாடு இழந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் ஆதரவுடன், சுமார் ரூ.15,000 கோடி மதிப்பிலான இந்த மெகா பாதுகாப்புத் திட்டம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இணைந்து நடத்தினர்.

ஆந்திரா – சந்திரபாபு நாயுடு – ராஜ்நாத் சிங்

ஓசூர் திட்டம் கைவிடப்பட்டது ஏன்?

இந்த நிலையில், முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.அர்.பி.ராஜா தன் எக்ஸ் பக்கத்தில், “நாம் பயந்ததுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது! இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது! தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைத் தமிழ்நாடு வழங்க முன்வந்த போதிலும், அதிநவீன ‘AMCA’ போர் விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத் திட்டத்தை தமிழ்நாடு இழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான முந்தைய அரசு, இந்தத் திட்டத்தை ஓசூரில் நிலைநிறுத்துவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்காக திமுக அரசு 100 ஏக்கர் நிலத்தை முற்றிலும் இலவசமாக வழங்க முன்வந்ததோடு, பெங்களூருவில் உள்ள ADA தலைமையகத்திற்கு மிக அருகில் உத்தேச ரீதியாக அமையும் வகையில் ஓசூர் விமான நிலையத்தில் 3.5 கி.மீ நீள ஓடுதளத்தையும் முன்மொழிந்தது.

என்ன அரசியல் காரணங்கள்?

நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு உத்தேச முதலீடுகள் எவ்வாறு அரசியல் அடிப்படையில் தீர்மானிக்கப்பட முடியும்? இந்த இடமாற்றம் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்; அதோடு கூட்டாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையைக் கடுமையாகச் சிதைப்பதாகும்.

 டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

இந்த ஒரு திட்டத்திற்காக நான் பல கூட்டங்களை நடத்தினேன், கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் குழுவினர் இதற்காக மிகவும் கடுமையாக உழைத்தனர். இவ்வளவு முக்கியமான ஒரு திட்டம் மாற்றப்படுவதைப் பார்க்கும்போது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடமும், நாம் தமிழ்நாட்டில் வழங்க முன்வந்த இடத்தை விட தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்தது அல்ல! இதற்கு ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும்.

ஆட்சி மாற்றம் என்பது இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைப் பாதிக்கக் கூடாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாகக் கொள்கைத் தொடர்ச்சிக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் இது நடக்கக் கூடாது! தற்போதைய அரசும் அதையே உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.

இந்தத் தருணத்தில் தமிழ்நாடு எவ்வித தொய்வையும் சந்திக்கக் கூடாது. இத்தகைய உத்தேச முதலீடுகளைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து பாதுகாப்பதற்கு, மாநிலத்திற்கு உடனடியாக ஒரு சுறுசுறுப்பான மற்றும் திறமையான தொழில்துறை அமைச்சர் தேவை.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்! நமது இட அமைவு, மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு ரீதியான மேன்மைகளை விளக்கி, பிரதமர் மோடிக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் அவசரமாகக் கடிதம் எழுத வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வலுவான தொழில்துறைப் பணிகளைத் தமிழ்நாடு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமக்கே உரித்தான ஒவ்வொரு உத்தேச முதலீட்டிற்காகவும் நாம் போராட வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக மா. செ; வெடித்த கோஷ்டி மோதல்; பேசுபொருளான அமைச்சரின் திண்டுக்கல் விசிட்!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு ஆயர்த்தீர்வை அமைச்சர் விக்னேஷ்,...

சிங்கப்பெண் அதிரடிப்படை: 'பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன்'- முதல்வர் விஜய்

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (ஜூன்.9) தொடங்கி வைத்திருக்கிறார்....

தொகுதி மறுவரையறை: மம்தா கட்சிக்குள் கலகம்! 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக அரசு?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு,...