10
May, 2026

A News 365Times Venture

10
Sunday
May, 2026

A News 365Times Venture

"ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்" – எடப்பாடி பழனிசாமி

Date:

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

இந்தத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான தமிழக வெற்றிக் கழகம், ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது.

தவெக விஜய்

ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்த பிறகே பதவியேற்பு நடத்தப்படும் என ஆளுநர் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

காங்கிரஸின் 5 உறுப்பினர்கள், கம்யூனிஸ்டுகளின் 4 உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்ததால் கூட்டணியின் பலம் 116 ஆக இருக்கிறது.

இருப்பினும் ஆட்சியமைக்க இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், திமுக கூட்டணியில் உள்ள விசிகவிடம் தவெக ஆதரவு கோரியிருக்கிறது.

இதனிடையே எதிரெதிர் துருவங்களான திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், உதயநிதி துணை முதல்வராகவும் வேண்டும் என்ற முனைப்புடன் திராவிடக் கட்சிகள் விஜய்க்கு எதிராக காய் நகர்த்தி வருவதாகக் கூறப்பட்டது.

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,
திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

இந்நிலையில், “நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்து சென்னை வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி தனது கட்சிகாரர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வரானார் சுவந்து அதிகாரி; பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்பு

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க 207 தொகுதிகளில் வெற்றி...

சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தனித்து ஆலோசனை – அதிமுகவில் பரபரப்பு!

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெக தனிப்பெரும்...

"அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மை. ஆனால்…" – சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி

மதுரையில் எஸ்ஏபி என அழைக்கப்படும் தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களின் நூல்...