27
April, 2026

A News 365Times Venture

27
Monday
April, 2026

A News 365Times Venture

மேற்கு வங்கம்: "பாஜக பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் தரும்" – மோடியின் வாக்குறுதி என்ன?

Date:

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.

முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

மம்தா பானர்ஜி

இந்நிலையில் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள போங்கான் பகுதியில் பாஜக சார்பில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங், ஆட்சியின் கீழ் சாதாரண அரசியல்வாதிகள் முதல் ரவுடிகள் வரை அனைவரும் தங்களையே அரசு நிர்வாகம் போல் கருதி செயல்படுகின்றனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான கொடுங்கோல் ஆட்சி, பெண்களைத் துன்புறுத்தும் ரவுடிகளுக்கே துணை நிற்கிறது. ‘இனி மேல் இதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்’ என, உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தும் சமூக விரோதிகள் அனைவரும், மே 4ம் தேதிக்குப் பின், மேற்கு வங்கத்தில் அமைய உள்ள புதிய பா.ஜ. அரசின் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 வழங்கப்படும். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் பெண்களுக்கு ரூ.1.80 லட்சம் கிடைக்கும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுபான வழக்கு: "இந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன், அதற்கு பதில்.!"- கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த...

ஈரான்: அணு ஆயுதம் குறித்து பேச தயார்; அதற்கு முன் 'இரண்டு' நிபந்தனைகள் – ஏற்குமா அமெரிக்கா?

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை முதல்முறை மட்டுமே நடந்தது....

சபரிமலை கோயில் மீது ஹெலிகாப்டர் பறந்த விவகாரம்: தீவிர விசாரணை நடத்தும் பத்தனம்திட்டா எஸ்.பி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு மேல் மிகவும் தாழ்வாக இந்தியக் கடலோர...

FBI: குடிபோதையில் தள்ளாடும் அமெரிக்க FBI இயக்குநர் காஷ் பட்டேல்? குற்றச்சாட்டும் பின்னணியும் என்ன?

அமெரிக்காவின் எப்.பி.ஐ இயக்குனராக இருப்பவர் காஷ் பட்டேல். பணி நேரத்தில்...