27
April, 2026

A News 365Times Venture

27
Monday
April, 2026

A News 365Times Venture

மதுபான வழக்கு: "இந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன், அதற்கு பதில்.!"- கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ

Date:

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்திருந்தது.

ஆனால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ மனுதாக்கல் செய்தது. இதனை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா விசாரித்து வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இதனிடையே டெல்லி மதுபான கொள்கை வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஒரு சார்புடையவராக உள்ளதாகக் கூறி, அவரை வழக்கில் இருந்து விலக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுத்த நிலையில், தற்போது கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், ” நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மாவிடம் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சுக்கு நூறாகிவிட்டது.

 நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா
நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா

அவர் முன்பு நான் இனி நேரடியாக ஆஜராகவோ, வழக்கறிஞர் வைத்தோ வாதிட மாட்டேன். மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வழியைப் பின்பற்ற நான் முடிவு செய்துள்ளேன். எனது மனசாட்சியின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"எனது இளமைக் காலத்தில் பொன்னான 15 ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காகவே அர்ப்பணித்தேன், ஆனால்..!" – ராகவ் சதா

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த ராகவ் சதா தனது...

25 ஏக்கரில் கல்லூரி… வெறும் 15 மாணவர்கள்; `ரூ.289 கோடி அவ்வளவுதானா?' – PDUIA-ன் அவல நிலை!

இந்தியாவின் தொல்லியல் துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், உத்தரப்பிரதேச மாநிலத்தில்,...

ஈரான்: அணு ஆயுதம் குறித்து பேச தயார்; அதற்கு முன் 'இரண்டு' நிபந்தனைகள் – ஏற்குமா அமெரிக்கா?

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை முதல்முறை மட்டுமே நடந்தது....

மேற்கு வங்கம்: "பாஜக பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் தரும்" – மோடியின் வாக்குறுதி என்ன?

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.முதற்கட்டமாக...