17
April, 2026

A News 365Times Venture

17
Friday
April, 2026

A News 365Times Venture

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

Date:

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும் களம் காண தவெக, மற்றும் நாதக இரண்டும் தனித்து நிற்கின்றன.

அடிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் மாநிலம் முழுக்க பிரசாரத்தில் பம்பரமாகச் சுற்றி வருகின்ற சூழலில், தேர்தல் தொடர்பான சில ஹாட் நியூஸ் பார்க்கலாமா?

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, ‘கேட்’டைத் திறக்காத தலைவர்!

புதிதாகத் தேர்தல் களத்துக்கு வந்திருக்கும் தலைவருடன் ஒரு காலத்தில் டூயட் பாடிய நடிகை அவர். தற்போது சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமா உலகத்தில் பலரும் இவரைக் கண்டாலே ஜெர்க் ஆவார்கள். அந்தளவு சண்டைக்கோழியாக வலம் வருபவர்.

தேர்தல் அறிவிப்பு வந்ததுமே தலைவருக்கு நெருக்கமான சர்க்கிளில் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

உங்க தலைவர் படத்துலதான் நான் அறிமுகமானேன். அவருக்காக இந்த தேர்தலில் பிரசாரம் செய்யலாம்னு நினைக்கேன்.

Election 2026

‘சென்னை மட்டும்னாலும் சரி, ஆல் தமிழ்நாடுனாலும் சரி, ஒரு ரவுண்டு வந்திடலாம். நாங்க‌ போய் இறங்கினா ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்னு தெரியும்ல, மேலிடத்துல பேசிச் சொல்லுங்க’ எனத் தூண்டிலைப் போட்டாராம். எலக்ஷனை வைத்து ஒரு கலெக்ஷனைப் போட்டு விடலாம் என்பதே அவரது ஐடியா.

ஆனால் தேர்வுக்கு ஸ்டடி ஹாலிடே விடுவாங்களே, அதுபோல தேர்தல் பிரசாரத்துக்கே இடையிடையே ஹாலிடே விட்டுக் கொண்டிருக்கிற அந்த தலைவரின் வீட்டு கேட் அத்தனை சீக்கிரம் திறந்து விடுமா என்ன? ‘வெயிட் பண்ணுங்க சொல்றோம்’ என்கிற பதிலே திரும்பத் திரும்ப வந்ததாம்.

பொறுத்துப் பொறுத்து வெறுத்துப் போன நடிகை, ‘இது வேலைக்கு ஆகாது’ என்கிற முடிவுக்கு வந்து அமைதியாகி விட்டாராம்.

புதுக் கட்சி, புது காரு, கலக்குங்க மீசைக்காரரே!

விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவில் இருந்தவர் நடிகர் மீசை ராஜேந்திரன். விஜயகாந்த்தின் மறைவுக்குப் பிறகும் கூட கட்சியிலேயே இருந்தவருக்கு இந்த தேர்தலில் சீட் வழங்கவில்லை பிரேமலதா.

‘மாற்றுக் கட்சியினருடன் நல்ல நட்பைப் பேணி வருகிறார்’ என இவர்குறித்து பிரேமலதா காதுக்குச் சென்றதாகவும் அதனாலேயே சமீபமாக கட்சியில் இவர் கண்டுகொள்ளப்படவில்லை என்கின்றனர். இந்த நிலையில் தனக்கு சீட் இல்லையென தெரிந்ததும் தேமுதிகவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து விட்டார். சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் இவரது வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டதை வைத்து திமுகவில்தான் சேரப்போகிறார் என எதிர்பார்த்தனர் பலரும்.

நடிகர் மீசை ராஜேந்திரன்

ஷஆனால் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அத்தோடு உடனடியாக பிரசாரத்துக்கும் கிளம்பி விட்டார்.

முக்கியமாக தேமுதிக நிற்கும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்துப் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கட்சி மாறிய நேரமா, அல்லது புது வருசம் பிறந்த யோகமா தெரியவில்லை, பிரசாரத்துக்கு கிளம்புவதற்கு முன்பாகவே புதுக் கார் ஒன்றும் வாங்கியிருக்கிறாராம்.

புதுக்கட்சி, புதுக்காரு.. கலக்குங்க சாரே என நண்பர்கள் அர்த்தச் சிரிப்புடன் வாழ்த்து சொல்லி வருகிறார்களாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related