20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

'72 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் காலமானார் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு!' – விவரம் என்ன?

Date:

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

வி.எஸ்.பாபு

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சுவாசக்கருவிகளின் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கவனித்து வருவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது. இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யும் மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்திருந்தார். சிகிச்சைக்கு வி.எஸ்.பாபுவின் உடல்நிலை ஒத்துழைப்பதாகவும் முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் கடைசியாக செப்டம்பர் 22 ஆம் தேதி அறிக்கை வெளியானது. அதன்பின் மருத்துவமனை தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் மரியவில்சன், ‘வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் மெதுவான முன்னேற்றமே இருக்கிறது’ எனக் கூறியிருந்தார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனளிக்காமல் மதியம் 2:24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை இப்போது அறிவித்திருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஆந்திராவின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது!" – ஆந்திரா அமைச்சர் கிண்டல்

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் செல்கின்றன. தமிழ்நாடு...

`15 ஊழியர்கள் ராஜினாமா? ஆந்திராவுக்கு முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா?' – Guidance Tamil Nadu விளக்கம்

தவெக ஆட்சி தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திராவிற்குச்...

தொடங்கிய இறுதி ஊர்வலம்: வி.எஸ் பாபு உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்!

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்.எல்.ஏ...

`அரசியல் கட்சி லாப நிறுவனமாகும் சூழல் உருவாகும்..!' – வெளிப்படையான டெண்டர் ஏன் அவசியம்? | ஓர் அலசல்

முந்தையை டெண்டர் வழக்கம்!மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அந்தப் பணிகளை அரசு...