13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

Date:

மதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல் குமார்.

ஆய்விற்குப் பிறகு, நிர்மல் குமார் பேசியதாவது…

“வைகை அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அணை கட்டப்பட்டதிலிருந்து இதுவரை ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. இதனால் அணையின் பல இடங்களில் மணல் குவியல்களும் படிவுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஒரு வாரமாக இது குறித்த பல ஆய்வுக் கூட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம்.

வைகை அணை

அந்த ஆய்வுகளின்படி, அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சுமார் 18 முதல் 20 சதவீதம் வரை படிவுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையைச் சரிசெய்து தூர்வாரும் பணிகளைத் தொடங்குவதற்கான ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

அனுமதிகள் மற்றும் அரசாணைகள்:

தூர்வாரும் பணிகளுக்காக ஒன்றிய அரசின் ஒப்புதலைக் கோரியும், சுற்றுச்சூழல் அனுமதி கோரியும் இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழக அரசு சார்பில் அனைத்துக் கடிதங்களும் அனுப்பப்பட்டுவிட்டன.

ஏற்கனவே எட்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஓர் அரசாணை நிலுவையில் உள்ளது.

தற்போது புதிய அரசாணை வெளியிடுவதற்கான வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திட்டமிடல் மற்றும் காலக்கெடு:

ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்தப் பணிகளை முழுமையாக முடிக்க ஒன்பது ஆண்டுகள் ஆகும் என்றும், அதனை மூன்று கட்டங்களாக செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்தப் பணிகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன், சுற்றுச்சூழல் அனுமதியை ஒரு மாதத்திற்குள் பெற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து அனுமதிகளும் கிடைத்த பிறகு, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தூர்வாரும் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வைகை அணை
வைகை அணை

மழைக்காலங்களில் கிராமங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மணலை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்தும் முறையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான சலுகைகள் மற்றும் கண்காணிப்பு:

பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வண்டல் மண்ணை எப்போதும் போல இலவசமாக எடுத்துக்கொள்ள முழு அனுமதி உண்டு.

ஆனால், இதனை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய மண்ணை யாராவது வணிக நோக்கத்திற்காக சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலத்தடி நீர் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு:

சின்னமனூர் போன்ற பகுதிகளில் வணிக நோக்கத்திற்காகச் சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களையும் காடுகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. எனவே, எந்தவித விதிமீறல்களும் இல்லாத பட்சத்தில் மட்டுமே பட்டாக்கள் வழங்கப்படும்.

வைகை அணை
வைகை அணை

பல நூற்றாண்டுகளாக அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. ஆனால் புதிதாகக் காடுகளை ஆக்கிரமித்து ரிசார்ட் கட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புறவழிச்சாலைத் திட்டங்கள்:

ஆண்டிப்பட்டி மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் கடந்த 20-25 ஆண்டுகளாக மக்கள் புறவழிச்சாலை கோரி வருகின்றனர்.

இந்தப் பகுதிகளில் மலைகள் குறுக்கிடுவதால் குடியிருப்புகளை அப்புறப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் மாற்றுப்பாதை அமைப்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன”. என்றார் விரிவாக.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக – அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக...

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...