28
November, 2026

A News 365Times Venture

28
Saturday
November, 2026

A News 365Times Venture

40 நிமிட கூட்டம்: 'தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை…' – தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு!

Date:

நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வரவிருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்திருக்கிறது.

ஸ்டாலின் தலைமையிலான கூட்டம்

எல்லா மாநிலங்களுக்கும் 50% தொகுதி உயர்வை அளிக்கும்படி தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது.

இதுகுறித்து திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் அறிவாலயத்தில் நடந்தது. காலை 10:10 மணிக்கு தொடங்கி 40 நிமிடங்கள் நடந்த கூட்டத்தின் முடிவில் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவளிக்கும் முடிவை திமுக எடுத்திருக்கிறது.

இதுசம்பந்தமாக பேசிய ஆ.ராசா, ‘நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தொகுதி மறுவரையறை மசோதா சம்பந்தமாக என்ன முடிவென தலைவர் அறிவித்தார்.

எல்லா மாநிலங்களுக்கும் 50% உயர்வை அளிக்கும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். எங்களின் முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல. நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது எடுத்த தீர்மானங்கள் அடிப்படையிலும், இப்போதைய அரசு தாக்கல் செய்திருக்கும் தீர்மானங்களின் அடிப்படையிலும்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

தமிழகத்தின் 7.12% பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்து வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

1974 தொகுதி மறுவரையின் போது தமிழகம் 2 தொகுதிகளை இழந்தது. இப்போது அப்படி எந்த இழப்பும் இல்லை. நமக்கு 7.12% பிரதிநிதித்துவம் கிடைக்கிறது.

தமிழ்நாட்டுக்கும் தேசத்துக்கும் இதனால் பெரிய பாதிப்பு இருக்காது. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், மொழி சிறுபான்மையினர்கள் பாதிக்கப்படும்படி பாஜக எதாவது செய்தால் சிறுபான்மையினர்களின் நண்பனாக நாங்கள் அதை எதிர்ப்போம்.

Fair Delimitation என காங்கிரஸூக்கே திமுகதான் வழிகாட்டியது’ எனப் பேசியிருந்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" – ஆதரவு குறித்து ஸ்டாலின்

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய...

தொகுதி மறுவரையறை : திமுக ஓகே; இன்னும 7 உறுப்பினர்கள் தேவை… நாடாளுமன்ற எண்களும் பாஜக கணக்கும்!

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான...

திருப்பரங்குன்றம்: "இப்படி ஒரு அசிங்கம் மாநிலத்திற்கு தேவையா?"- நீதிமன்ற உத்தரவு குறித்து இபிஎஸ்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச...

"மாநில உரிமைகளுக்காக கடந்த காலங்களில் மிக வலுவாகக் குரல் கொடுத்த கட்சி திமுக, ஆனால்.!"- சசி தரூர்

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவிற்கு திமுக நிபந்தனையுடன் கூடிய...