தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட சட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் மாநாடு சென்னையில் நேற்று ( மார்ச்1) நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டம் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இந்திய அரசமைப்பு முழுமையாக நடைமுறைக்கு வந்தால் இந்தியா சமத்துவ தேசமாகியிருக்கும். அரசியல் அதிகாரத்தில் இருப்பவருடன் இணைந்து தனக்கான உரிமையைப் பெறுவது சிறந்த நடைமுறை.
அதிகார வர்க்கத்தை செயல்பட வைப்பதில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசியல் ரீதியாக வலிமையடைந்தால் மட்டுமே அதிகார வர்க்கத்தை செயல்பட வைக்க முடியும். நம் கட்சியில் 4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருந்தும் கொடி ஏற்றுவதில் பிரச்னை இருக்கிறது.

அவ்வளவு எளிதாக ஒரு இடத்திற்கு சென்று கொடி ஏற்ற முடியவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றும்போதுதான் அதிகாரிகள் சட்டங்களை பேசுவார்கள். பேனர் வைத்தால் அதை அகற்றிவிடுவார்கள். இதனால் அரசியல் ரீதியாக வலிமை அடைய வேண்டிய தேவை இருக்கிறது. இது போதாது என்ற போதாமையை காட்டுகிறது” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs