20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

`15 ஊழியர்கள் ராஜினாமா? ஆந்திராவுக்கு முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா?' – Guidance Tamil Nadu விளக்கம்

Date:

தவெக ஆட்சி தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திராவிற்குச் செல்கின்றன என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

இப்போது இதற்குத் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தைச் (Guidance Tamil Nadu) சேர்ந்த 15 ஊழியர்கள் தொழில் முதலீடுகள் தொடர்பான முக்கிய ரகசியத் தகவல்களை ஆந்திரப் பிரதேசத்திற்குக் கசியவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

Guidance Tamil Nadu அறிக்கை

Guidance Tamil Nadu அறிக்கை

இந்தக் குற்றச்சாட்டு குறித்துத் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மாறாக, 2026 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் யாரும் மொத்தமாக ராஜினாமா செய்யவில்லை.

எந்தவொரு நிறுவனத்திலும் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவது என்பது இயல்பான ஒன்றே.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தைப் பொறுத்தவரை, சிறந்த வேலைவாய்ப்புகள், உயர்கல்வி, இடமாற்றம் மற்றும் தனிப்பட்ட அல்லது குடும்பச் சூழ்நிலைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவே ஊழியர்கள் பணியிலிருந்து விலகுகின்றனர்.

புதிய வாய்ப்புகளைத் தேடி…

வேறு இடங்களில் புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்பவர்கள் உட்பட, தனது ஊழியர்களின் தொழில்முறை விருப்பங்களுக்குத் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் எப்போதும் மதிப்பளித்து வருகிறது.

முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டியையே தமிழ்நாடு எப்போதும் கொண்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஆந்திராவின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது!" – ஆந்திரா அமைச்சர் கிண்டல்

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் செல்கின்றன. தமிழ்நாடு...

தொடங்கிய இறுதி ஊர்வலம்: வி.எஸ் பாபு உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்!

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்.எல்.ஏ...

`அரசியல் கட்சி லாப நிறுவனமாகும் சூழல் உருவாகும்..!' – வெளிப்படையான டெண்டர் ஏன் அவசியம்? | ஓர் அலசல்

முந்தையை டெண்டர் வழக்கம்!மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அந்தப் பணிகளை அரசு...

கம்பன் திருவிழாவில் தமிழக அமைச்சர்கள்… காரைக்குடி தமிழ்த்தாய் கோயிலில் தமிழ் விழா நடத்த கோரிக்கை!

தேவகோட்டை கம்பன் கழகம் சார்பில், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் புகழைப் போற்றும் வகையில்...