5
September, 2026

A News 365Times Venture

5
Saturday
September, 2026

A News 365Times Venture

"10-க்கு 9 நாங்க; அதிமுகவும், நாமும் ஒன்றுதானே" – அதிமுக-வின் மறுப்பும் ஆதவ்வின் பதிலும்

Date:

சட்டமன்றத்தில் இன்று (செப்.1) கைத்தறி, தொழிலாளர் நலன் – குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய தவெக எம்எல்ஏ பிராகாசம், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி தொகுதியில் செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விரைவில் முடித்து தருமாறு மாண்புமிகு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஆதவ் அர்ஜுனா

அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திருவள்ளூர் எங்களுடைய மாவட்டம், 10-க்கு 10 தொகுதிகளை வென்றிருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்றார்.

அப்போது அதிமுகவினர் குறுக்கிட்டு, “10-க்கு 10 தொகுதி இல்லை. நாங்கள் ஒரு தொகுதியை வென்றிருக்கிறோம்” என்றனர். அதற்கு ஆதவ் அர்ஜுனா, “சரி 10-க்கு 9 தொகுதிகளை வென்றிருக்கிறோம். எல்லாம் நம்மளுடையதுதானே… அதிமுகவும், நாமும் ஒன்றுதானே” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

தொடர்ந்து சபாநாயகரும் சிரித்துக்கொண்டே, “அந்த உறவெல்லாம் அவைக்குத் தெரியாது” என்று தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய கண்ணாடியில் AI கேமராவா? – அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்

தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும்,...

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' – ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி...

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" – கனிமொழி

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று...

Trump: "ஹார்முஸ் நீர்ச்சந்திக்குப் பதிலாக சிரியா" – ட்ரம்ப் சொல்லும் ‘புதிய வழி’ என்ன?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.இந்தப் போரில் அமெரிக்காவிற்கும்,...