29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

ஸ்டாலின் வருகையால், தள்ளிப்போன விஜய்யின் வேலூர் விசிட்! – வேகம் காட்டும் தவெக நிர்வாகிகள்

Date:

வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அந்த தேதியில் நிகழ்ச்சியை நடத்த சில சிக்கல்கள் இருந்ததால் வேறு தேதியையும் தவெக-வினர் பரிசீலித்து வந்தனர்.

இதற்காக, வேலூர்-திருப்பத்தூர் மாவட்டங்களின் எல்லைகளைப் பிரிக்கும் அகரம்சேரியில் 25 ஏக்கரிலான பிரமாண்ட வெளிப்புற மைதானம் தேர்வுசெய்யப்பட்டு, அதைச் சீரமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஜய் வருகைக் குறித்தான தேதியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

வரும் 14-ம் தேதி சனிக்கிழமை, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் தி.மு.க வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடும் நடைபெற உள்ளது.

அகரம்சேரியில் சீரமைக்கப்படும் விஜய் நிகழ்ச்சிக்கான இடம்

முதலமைச்சர் ஸ்டாலின், அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதனிடையே, முதலமைச்சர் வருகைக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 13-ம் தேதியன்று விஜய்யின் நிகழ்ச்சிக்கு த.வெ.க நிர்வாகிகள் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு, காவல்துறைத் தரப்பில் இருந்து திட்டவட்டமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

எனவே தான், ஸ்டாலின் வந்துசென்ற பிறகு மூன்றாவது வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் அல்லது பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில், வேகம் காட்டுகிறார்கள் த.வெ.க நிர்வாகிகள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து; "மேல்முறையீடு செய்க" – திருமா

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர்...

நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து – உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், மாற்று சமூகத்தைச்...

"தவெக அரசு 4 மாதங்களிலேயே தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கிவிட்டது" – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

"மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனி எவரும் வாய் திறக்கக் கூடாது" – டாக்டர் கிருஷ்ணசாமி

"மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனிமேல் எவரும் வாய் திறக்காத அளவிற்கு,...