4
October, 2026

A News 365Times Venture

4
Sunday
October, 2026

A News 365Times Venture

“ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" – எம்.பி கார்த்தி சிதம்பரம்

Date:

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், “தமிழக முதல்வர் விஜய் திடீரென பிரசாரத்தின் போது டிராக்டர் ஓட்டுவது, பொதுமக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவது மற்றும் வயல்வெளிகளில் இறங்கிப் பேசுவது என ஒரு பிரசாரத்திற்கு என்ன தேவையோ அதை நன்கு அறிந்து செயல்படுகின்ற ஒரு நல்ல பழுத்த, மூத்த அரசியல்வாதியாக செயல்படுகிறார்.

ஸ்டாலின்

நான் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதையும் ஏற்க முடியாது. அதேவேளையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இந்தியில் பெயர் பலகைகள் வைப்பதில் தவறில்லை. ஆங்கிலம் மற்றும் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைப் பார்த்து அதற்கு ஏற்ப வசதி செய்து கொடுக்கலாம். உதாரணமாக, வாரணாசி காசி கோயிலுக்குத் தமிழகத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் செல்வதால், அவர்களின் வசதிக்காக அங்கு தமிழில் பெயர் பலகை வைத்துள்ளார்கள். எனவே, இதைச் சர்ச்சையாக்காமல் ஒரு வசதியாகப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசியல் மேடைகளிலும் சட்டமன்றத்திலும் நக்கல், நையாண்டிகள் நடப்பது இயல்பான ஒன்றுதான். இருப்பினும், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உருவக் கேலி செய்வதைத் தவிர்த்திருக்கலாம். அதேநேரத்தில், அதை ஒரு பெரிய சர்ச்சையாக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" – மாணிக்கம் தாகூர் விமர்சனம்

சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன்...

“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது தான் வழக்கம்..!” – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்...

தற்கொலைக் குறிப்பில் பெயர்; `CEC ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை'- கேரள அரசு உத்தரவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை...

By Election: `டாஸ்மாக் மூடல், வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு!'- தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்...