13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

'வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்'- திமுகவில் இணைந்த பனையூர் பாபு

Date:

இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது…

“எப்போதும் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைப் பாதையிலேயே பயணிப்பேன். அந்த அரசியல் பயணம் திமுகவிலும் தொடரும்.

திமுகவில் இணைந்த பனையூர் பாபு

சீட்டுக்காக நான் கட்சியை விட்டு வெளியேறவில்லை. வேட்பாளர் அறிவிப்பு முதல் வாக்கு எண்ணிக்கை வரை விசிகவிலேயே இருந்தேன். அதற்குப் பின் நடந்த சில அரசியல் நகர்வுகளால் ஏற்பட்ட நிர்பந்தத்தினால் தான் வெளியேறினேன்.

மாநில அரசாங்கத்தில் மட்டுமல்ல, ஒன்றிய‌‌ அரசாங்கத்திலும் ஆட்சியில் பங்கு பெறுவதற்கான தகுதி திருமா அண்ணனுக்கு உண்டு.

கொள்கை மாறாமல் இருக்க வேண்டுமானால், ஒன்றிய அரசிலேயே அமைச்சர் ஆகியிருக்கலாம் அல்லவா அவர்?

தவெக ஆதரவு குறித்து முன்பு எதுவும் திருமா அண்ணன் என்னிடம் கூறவில்லை.

பெயரளவில் மட்டுமே அம்பேத்கரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவராக வைத்திருக்கிறார்‌ விஜய்.

2016-ம் ஆண்டு காலகட்டத்தில் விசிகவின் எந்தவொரு நிகழ்வும் பெட்டி செய்தியாகக் கூட வராது. வெளிச்சம் தொலைகாட்சி தொடங்கப்பட்ட பிறகே, விசிகவின் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரே தொலைகாட்சி – வெளிச்சம் தொலைகாட்சி.

அந்தத் தொலைகாட்சிக்கும், விசிகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது என்னுடைய சொந்தக் காசில் தொடங்கப்பட்ட தொலைகாட்சி.

அந்தத் தொலைகாட்சி எழுச்சி தமிழருக்காகத் தொடங்கப்பட்டது. அது அப்படியே தொடரும்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...