15
August, 2026

A News 365Times Venture

15
Saturday
August, 2026

A News 365Times Venture

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" – சீறும் அண்ணாமலை

Date:

கமலாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழாவில் பேசிய நயினார் நாகேந்திரன், ”செத்த மாட்டு தோலினால் செருப்பு செய்யலாமே, செத்த ஆட்டு தோலினால் ஆடை செய்யலாமே, செத்த மனிதனின் தோலால் என்ன செய்ய முடியும்?

அப்பேற்பட்ட மனிதர்கள் இருக்கக்கூடிய ஆட்சி செய்யக்கூடிய உலகமாக மாறிவிட்டது. சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கும் அமைச்சர் வன்னியரசு, ”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

முதல்வர் விஜய் - அமைச்சர் வன்னியரசு
முதல்வர் விஜய் – அமைச்சர் வன்னியரசு

பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” எனக் கூறியிருக்கிறார்.

நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து கூறியிருக்கும் அண்ணாமலை, ”தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

3,508 ஆதரவற்ற உடல்கள் நல்லடக்கம்; திருவண்ணாமலை மணிமாறனுக்கு `சிறந்த சமூகப் பணியாளர்’ விருது

பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில் முகமறியாத...

ஈரோடு: மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட 80 வது சுதந்திர தின விழா! | Photos

"தமிழ்நாடு முன்னாள் படை வீரர்களின் மகள்கள் திருமணத்திற்கு ரூ.50,000 நிதியுதவி" -...

'800க்கு 538 மதிப்பெண்' – 2வது சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு; அலுவலர்கள் பெருமிதம்!

நாடு முழுவதும் 80வது சுந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக முதலமைச்சர்...